இந்த தமிழ் படங்களின் காப்பி தான் ‘ஜவான்’!! நெட்டிசன்கள் கலாய்.. என்ன அட்லீ இதெல்லாம்?

0
59
#image_title

இந்த தமிழ் படங்களின் காப்பி தான் ‘ஜவான்’!! நெட்டிசன்கள் கலாய்.. என்ன அட்லீ இதெல்லாம்?

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவர் அட்லீ.இதுவரை இவர் ராஜா ராணி,தெறி,மெர்சல்,பிகில் உள்ளிட்ட தமிழ் படங்களை இயக்கி இருக்கிறார்.இவர் இயக்கிய படங்கள் குறைவு என்றாலும் அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானதால் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.தமிழ் மட்டும் படம் இயக்கி வந்த இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து முதன் முதலாக ஹிந்தியில் ஜவான் என்ற படத்தை இயக்கினார்.

நடிகர் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் நயன்தாரா,யோகிபாபு,விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் கடந்த செப்டம்பர் 7 அன்று திரையரங்கிற்கு வந்த இப்படம் கதை மற்றும் வசூல் ரீதியாக பிளாக் பஸ்டர் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்பொழுது ஜவான் படத்தை பார்த்த சிலர் வழக்கம் போல் அட்லீ மற்ற படங்களின் சில காட்சிகளை ஜவான் படத்தில் காட்டி இருக்கிறார் என்று கலாய்த்து வருகின்றனர்.ஒரு சிலர் அட்லீ இதற்கு முன் அவர் இயக்கிய படமான தெறி,மெர்சல்,பிகில் படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளை சுட்டு ஜவான் படத்தில் வைத்துள்ளார் என்று விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழில் வெளியான ரமணா,வில்லு,மங்காத்தா,ஆரம்பம்,கத்தி,தெறி,மெர்சல், சர்க்கார்,சர்தார்,சிட்டிசன்,க்ரிஷ்,விவேகம்,மணி ஹீஸ்ட் உள்ளிட்ட 23 படங்களில் வரும் காட்சிகளின் மொத்த காப்பி தான் ஜவான் படத்தின் கதை என்று பலர் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.பொதுவாக மற்ற படங்களின் காட்சிகளை சுட்டு தன் படத்தில் வைக்கும் அட்லீ தற்பொழுது தான் இயக்கிய படங்ளிளில் இருந்தும் காப்பி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று பலர் கலாய்த்து வருகின்றனர்.