ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா vs பாகிஸ்தான்… போட்டி தேதி அறிவிப்பு!

0
236

ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா vs பாகிஸ்தான்… போட்டி தேதி அறிவிப்பு!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளின் அரசியல் காரணங்களுக்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு தரப்பு போட்டிகளில் விளையாடுவதில்லை. ஆனால் ஐசிசி நடத்தும் தொடர்களில் மோதுகின்றன. கடந்த ஆண்டு நடந்த டி 20 தொடர் உலகக்கோப்பையில் இரு அணிகளும் மோதின.

இந்த போட்டி அந்த தொடரின் இறுதிப் போட்டியை பார்த்தவர்களை விட எண்ணிக்கை அதிகம். இந்நிலையில் இம்மாத இறுதியில் ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோத உள்ளன.

இந்த தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிகிரது. ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் போட்டி தொடங்கும், இறுதிப் போட்டி செப்டம்பர் 11-ஆம் தேதி நடைபெறும். இதில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதக்கூடும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் குரூப் ஏ வில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ள நிலையில் இரு அணிகளும் மோதும் போட்டி ஆகஸ்ட் 28 ஆம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆசியக்கோப்பைக்கான முழு அட்டவணையும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை தொடரில் அதிக கோப்பைகளை வென்ற அணியாக இந்தியா இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Previous articleகுருதி ஆட்டம் இயக்குனரை சந்தித்த சிவகார்த்திகேயன்… வைரலாகும் புகைப்படம்!
Next articleபணக்கஷ்டம்.. கடன்சுமையை போக்கி.. வருமானத்தை அதிகரிக்க செய்யும்.. தாமரை மணிமாலை..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here