ஆசிய கோப்பை தொடர் : அஸ்வின் ஏன் இடம்பெறவில்லை…? ரோகித் சர்மா விளக்கம்!

0
90

 

ஆசிய கோப்பை தொடர் : அஸ்வின் ஏன் இடம்பெறவில்லை…? ரோகித் சர்மா விளக்கம்!

 

ஆசிய கோப்பை தொடரில் வேகப்பந்து வீச்சாளர் அஸ்வின் இடம் பெறாதது குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் கொடுத்துள்ளார்.

 

வரும் அக்டோபர் மாதம் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக இந்திய அணி ஐசிசி கோப்பை வெல்லவில்லை. ஆதலால் இந்த முறை ஐசிசி கோப்பை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி மும்முரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

 

இந்நிலையில், வரும் 30ம் தேதி ஆசிய கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இத்தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டது.

 

இந்திய அணியில் மொத்தம் 17 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில், 6 வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது ரசிகர்களிடையே குழப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் அஸ்வின் பெயர் வெளிவராதது அவருடைய ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இது தொடர்பாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேசுகையில், நாங்கள் தேர்வுக்குழு கூட்டத்தில் அஸ்வின், சாஹல், வாஷிங்டன் சுந்தர் குறித்து விவாதித்தோம். எங்களுக்கு வலுவான பேட்டிங் தேவை. அதனால்தான் அக்சர் படேலை தேர்வு செய்தோம். ஆதலால் சாஹல், அஸ்வின் பெயர்கள் அணியில் இடம்பெறவில்லை.

 

உலகக்கோப்பைத் தொடரில் அஸ்வின், சாஹல், வாஷிங்டன் சுந்தர் இவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என்று கூறமுடியாது. அதற்கான கதவுகள் அடைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Previous articleஎனக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி… நியூயார்க் 41வது இந்தியநாள் கொண்டாட்டத்தில் நடிகை சமந்தா பேச்சு!!
Next articleவிவசாயத்தை ஊக்குவிக்க மாட்டு வண்டியில் வந்த மணமக்கள்… இணையத்தில் வைரலாகும் மணமக்கள்…