ஆசிய விளையாட்டு கிரிக்கெட் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு!

0
167
asian games cricket final india vs afghanistan match update
asian games cricket final india vs afghanistan match update

இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று நடைபெறவிருக்கும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் இறுதிச்சுற்று போட்டியில் விளையாடி வருகின்றன.

சீனாவின் ஹங்சோ நகரில் நடைபெற்று வரும் 19 வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கபதக்கம் வெல்ல இன்று இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

நேற்று நடைபெற்ற அரையிறுதிச்சுற்றில் இந்தியா பங்களாதேஷ் அணியுடன் மோதியது.இதில்  9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி  பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது..அதேபோல ஆப்கானிஸ்தான் அணியும் அரையிறுதிச்சுற்றில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் இறுதிச்சுற்று போட்டி இன்று காலை 11:30 மணிக்கு தொடங்கியது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி வீரர் ருதுராஜ் கேக்வாட் பந்து வீச்சை தேர்வு செய்தார்..

ஆனால் மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் ஒத்திவைக்கபட்டு மழை நின்றபின் மைதான சீரமைப்பு பணிகள் முடிந்தபின்  மீண்டும் போட்டிகள் தொடங்கின.

இதனைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி தற்போதைய நிலவரப்படி 14 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Previous articleநாமினேஷனில் இடம் பெற்றதற்கு மகள் ஜோவிகாவை புகழ்ந்து தள்ளிய பிக் பாஸ் வனிதா !
Next articleதமிழ் மகனார் கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு மறைவு! தமிழ் ஆர்வலர்கள் இரங்கல்