“ஓட்டு கேட்க வரும் ஒன்றிய அரசிடம் கேளுங்கள்” : தங்கம் தென்னரசு!!

0
437
#image_title

“ஓட்டு கேட்க வரும் ஒன்றிய அரசிடம் கேளுங்கள்” : தங்கம் தென்னரசு!!

நாடாளுமன்ற தேர்தல் வருவதை முன்னிட்டு திருநெல்வேலி தொகுதி சார்பில் திமுக பொதுக்கூட்டம் நேற்று இரவு பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், ” நிதி உரிமைகளை நாம் இழந்திருக்கிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் சட்டப்பேரவையில் நிதி அறிக்கையை நான் சமர்ப்பிக்க இருக்கிறேன். நிதி அமைச்சராக பட்ஜெட் வழங்கினாலும் வரி விதிப்பதற்கான அதிகாரம் நம்மிடம் உள்ளதா. அந்த அதிகாரத்தை இழந்ததன் மூலம் 20000 கோடி இழப்பீட்டை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

நிதியை இழக்கிறோம், மொழியை இழக்கிறோம். நீட் தேர்வு தேசிய கல்விக் கொள்கை என நெருக்கடிக்கு உள்ளாக்கும்போது உரிமைகுரல் கொடுக்கும் ஒரே அரசு திமுக அரசு. ஒரு ரூபாய் கூட வெள்ள நிதிக்காக பாஜக அரசோ ஒன்றிய அரசோ நெல்லைக்கு வழங்கவில்லை.

அவர்கள் ஓட்டு கேட்டு வரும்போது கேளுங்கள் ‘ நாங்கள் வெள்ளத்தில் சிக்கியிருந்தோமே, மாநில அரசு ஓடி வந்ததே, முதலமைச்சர் ஓடி வந்தாரே, மத்திய அமைச்சர் வந்து பார்வையிட்டு சென்றாரே தவிர ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லையே ‘ எனக் கேளுங்கள்” என பேரிடர் காலங்களில் மக்களின் கண்ணீரை துடைக்கும் அரசாக திமுக அரசு விளங்குகின்றது என பெருமிதமாக பேசினார். இந்த கூட்டத்தில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Previous articleஅதிரடி காட்டும் GOLD ரேட்! இன்று சவரனுக்கு ரூ.160 உயர்வு!
Next articleவிரைவில் பஞ்சுமிட்டாய்க்கு தடை? மா.சுப்ரமணியன் அறிவிப்பு!