விரைவில் பஞ்சுமிட்டாய்க்கு தடை? மா.சுப்ரமணியன் அறிவிப்பு!

0
235
#image_title

விரைவில் பஞ்சுமிட்டாய்க்கு தடை? மா.சுப்ரமணியன் அறிவிப்பு!

புதுச்சேரியில் பஞ்சுமிட்டாய் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் மெரினா கடற்கரையில் விற்க்கப்பட்ட பஞ்சுமிட்டாய் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆய்வின் போது ‘ரோடமைன் பி ‘ புற்றுநோய் உருவாகக்கூடிய கெமிக்கல் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

பச்சை, ஊதா உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை சாப்பிடக்கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். தயாரிப்பு நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறைக்கு, உணவு பாதுகாப்புத்துறைக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதனையடுத்து சென்னையில் ஆட்டோ, டாக்சி சங்கத்தின் மாநாட்டை துவக்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய அவர், ‘”பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று முதலமைச்சரை சந்தித்து பஞ்சுமிட்டாய் ஆய்வு குறித்த அறிக்கையை சமர்பிக்க உள்ளோம். விரைவில் உணவு பாதுகாப்புத் துறை அறிவிப்பு வெளியாகும். உணவு பாதுகாப்புத் துறை பரிந்துரையின் அடிப்படையில் தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் தடை விதிப்பு செய்யப்படும்.’ எனத் தெரிவித்தார்.

author avatar
Preethi