நள்ளிரவில்  திருநங்கையை படுக்கைக்கு அழைத்த  ஆசாமிகள்! நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Photo of author

By Rupa

நள்ளிரவில்  திருநங்கையை படுக்கைக்கு அழைத்த  ஆசாமிகள்! நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Rupa

Assamese who invited transgender people to bed at midnight! Shame on you!

நள்ளிரவில்  திருநங்கையை படுக்கைக்கு அழைத்த  ஆசாமிகள்! நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

பெண்களுக்கு அடுத்த படியாக இந்த காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு அதிகப்படியாக பாதிப்படைவது திருநங்கைகள் தான். வேலை செய்யும் இடங்கள் முதல் படிக்கும் இடம் வரை பல முறைகளில் அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டு வருகிறது.மேற்கொண்டு அவர்கள் ஆசைக்கு இணங்க மறுத்தால் கொலை செய்யவும் துணிந்து விடுகின்றனர். தினந்தோறும் ஏதேனும் ஓர் பகுதியில் திருநங்கையை தாக்கியதாக புகார்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அவ்வாறு கோவை மாவட்டத்தில் ஒரு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் பள்ளபாளையம் என்ற பகுதியில் வசித்து வருபவர் தான் திருநங்கை. இவர் சோனா என்ற மற்றொரு திருநங்கையின் பாதுகாப்பில் வசித்து வருகிறார். நேற்று இரவு ஒரு மணிக்கு மேல் அவரது வீட்டிற்கு தர்ஷா சென்றுள்ளார். அவர் வீட்டிற்கு கோவை ஒண்டிபுதூர் மிராசு தியேட்டர் அருகில் தான் செல்ல வேண்டும். அந்த தியேட்டரில் இருந்து அதன் வழியாக வந்த சிலர் தர்ஷாவை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

ஆளில்லாத இடத்தில் தர்ஷாவை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளனர். தர்ஷா அவர்களுடன் செல்லாமல்  தொடர்ந்து மறுத்து உள்ளார். பின்பு அந்த மர்ம நபர்கள் ,அவர்களிடம் இருந்து தப்பிக்க தர்ஷா கூச்சலிட்டு உள்ளார். தர்ஷா கூச்சலிட ஆரம்பித்ததும் அந்த மர்ம நபர்கள் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். மர்ம நபர்கள் தாக்கியதில் திருநங்கை தர்ஷா சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். அவ்வழியே  வந்த ரோந்து போலீசார் தர்ஷாவை  மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மேலும் தார்ஷாவைவை தாக்கியவர்களையும் போலீசார் கண்டறிந்து கைது செய்தனர். தார்ஷாவை தாக்கிய மர்ம நபர்கள் அம்மாவட்டத்தின் நீலிகோணம்பாளையம் என்ற பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வருபவர் என்பது தெரிய வந்தது. தற்பொழுது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.