சட்டசபையில் முதலமைச்சரின் செயலால் திகைத்துப்போன அதிமுக எம்எல்ஏக்கள்!

Photo of author

By Sakthi

சட்டசபையில் முதலமைச்சரின் செயலால் திகைத்துப்போன அதிமுக எம்எல்ஏக்கள்!

Sakthi

தற்சமயம் நடைபெற்று வரும் தமிழக பட்ஜெட் சட்டசபை கூட்டத் தொடரில் எதிர்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் உரையாற்றும்போது திமுக அமைச்சர்கள் குறுக்கீடு செய்ய வேண்டாம் என்று சட்டப்பேரவையில் ஒரு உத்தரவை போட்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி அதாவது நேற்றைய தினம் ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கை நடந்தது. இதில் இரண்டு துறை அமைச்சர்களான கே என் நேரு மற்றும் பெரியகருப்பன் உள்ளிட்டோர் உரையாற்றி எதிர்க்கட்சியை சார்ந்தவர்களின் கேள்விகளுக்கு பதில் தெரிவித்தார்கள்.சென்ற காலங்களில் துறை ரீதியான மானிய கோரிக்கையின் போது எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் விவாதம் செய்யாத அளவிற்கு கூச்சல் குழப்பம் செய்து உரிமையை மறுப்பார்கள். இதுதான் இதுவரையும் நடைபெற்று வந்தது என்று சொல்லப்படுகின்றது.

அதற்கு ஒரு உதாரணமும் சொல்லப்பட்டு இருக்கிறது அதாவது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் மானிய கோரிக்கையின் போது திராவிட கழகத்தின் சட்டசபை உறுப்பினர்கள் விவாதத்தை ஆரம்பிக்கும்போது மேஜையை தட்டி சப்தம் போட்டு பேசுவதை இடை மறிப்பார்கள். ஆளுங்கட்சியின் சட்டசபை உறுப்பினர்கள் இதனை சம்பந்தப்பட்ட அமைச்சரும் கண்டுகொள்ளாமல் எதையாவது கவனித்துக் கொண்டு இருப்பார். அதே கோபத்தில் பலமுறை வெளிநடப்பு செய்தது உள்ளிட்ட நிகழ்வுகளும் சட்டசபையில் நடைபெற்று இருக்கிறது.

அது போன்ற செயல்கள் இனி ஒரு காலத்திலும் நடந்துவிடக் கூடாது என்று முடிவு செய்த முதலமைச்சர் சட்டமன்றம் கூடுவதற்கு முன்பாகவே அமைச்சர்களுக்கும், சட்டசபை உறுப்பினர்களுக்கும், ஒரு உத்தரவை போட்டுஇருக்கின்றார். அதாவது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் உரையாற்றும் போது நீங்கள் யாரும் கூச்சல், குழப்பம் செய்யக்கூடாது. சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எதிர்க்கட்சியினர் கேள்விகளுக்கு தெளிவான பதிலை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இந்த நிலையில், நேற்றைய தினம் நடந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியத்தின் மீதான விவாதத்தில் திராவிடர் முன்னேற்ற கழகத்தின் சட்டசபை உறுப்பினர்கள் உட்பட எட்டு சட்டசபை உறுப்பினர்கள் உரையாற்றினார்கள். அதில் அதிமுக சட்ட சபை உறுப்பினரும் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி உரையாற்றும்போது, எங்கள் ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்படுகின்றது. அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும், கோயம்புத்தூரில் பல திட்டங்கள் முடக்கப்பட்டது என்று உரையாற்றிய சமயத்தில் அமைச்சர் கே என் நேரு குறித்து பேசத் தொடங்கியவுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய கையை அசைத்து அமர சொல்லியிருக்கின்றார். உடனடியாக அமைச்சர் நேரு முடிவில் சரியான பதில் தருகிறேன் என்று அமர்ந்துவிட்டார்.

சற்று நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சி சட்டசபை உறுப்பினர்கள் பேசும்போது அமைச்சர்கள் குறித்து உரையாற்ற வேண்டாம் அவர்களை முழுமையாக பேச விடுங்கள். கடைசியாக விளக்கம் அளியுங்கள் என்றபோது அதிமுகவின் சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் திகைத்துப் போய் அமர்ந்து இருந்தார்கள். சட்டசபையில் முதலமைச்சர் வெளிப்படையாக பேசியது அதிமுக மட்டுமல்ல பாஜகவின் சட்டசபை உறுப்பினர்களும் பாராட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது.