அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அதிமுக தலைமைக்கழகம்! பரபரப்பானது தேர்தல் களம்!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டிற்கு சட்டசபை தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது ஆனாலும் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அதிமுக மற்றும் திமுக என்ற பிரதான கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், சென்ற தேர்தலில் விருப்ப மனு தாக்கல் செய்வது மற்றும் வேட்பாளர் அறிவிப்பாக இருந்தாலும் எப்பொழுதும் அதிமுக எல்லோருக்கும் முன்பாகவே அனைத்தையும் செய்து வந்தது அது போல இந்த தேர்தலிலும் எல்லோருக்கும் முன்னதாகவே அந்த கட்சி உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் துணை முதலமைச்சருமான ஓ பன்னீர்செல்வம், மற்றும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒன்றாக வெளியிட்டு இருக்கின்ற செய்தி குறிப்பில், தமிழக சட்டசபைத் தேர்தல், மற்றும் புதுச்சேரி கேரளா ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் போன்றவை விரைவாக நடைபெற இருப்பதை தொடர்ந்து அதிமுக சார்பாக வேட்பாளராக போட்டியிட விரும்புகின்றவர்கள் தலைமை கழகத்தில் எதிர்வரும் 24ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் மூன்றாம் தேதி வரையில் அனுதினமும் விண்ணப்ப கட்டணம் தொகையை தலைமை கழகத்தில் செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழே குறிப்பிடப்பட்டிருக்கும்படி கட்டனத்தொகையை செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொண்டு அதில் கேட்கப்பட்டிருக்கும் எல்லா விவரங்களையும் தெளிவாக பூர்த்தி செய்து மறுபடியும் தலைமை கழகத்தில் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விருப்பமனுவிற்கு தமிழ்நாட்டில் 15 ஆயிரமும், புதுச்சேரியில் ரூபாய் ஐந்தாயிரம், கேரள மாநிலத்தில் ரூபாய் 2000 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது என்று அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.