மத்திய அரசானது விவசாயிகளுக்கு பல்வேறு உதவி தொகைகளை வழங்கி வரக்கூடிய நிலையில் தற்போது அதனோடு கூடவே ஓய்வூதியத்திற்கான திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, பிஎம் கிசான் மான் தன் யோஜனா திட்டத்தின் கீழ் பி எம் கிஷான் வங்கி கணக்கு வைத்திருக்கக்கூடிய விவசாயிகளுக்கு ஒரு வருடத்திற்கு 42,000 ரூபாய் வரை ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டம் செயல்பட்டு வருகிறது.
இனி விவசாயிகளுக்கு உதவித்தொகை மற்றும் அதனோடு கூடவே ஓய்வூதியமும் கிடைப்பதற்கான வழிவகையை மத்திய அரசு செய்துள்ளது. இவை இரண்டிலும் விவசாயக் கல் இணைந்து பயன் பெறுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.
பிரதான் மந்திரி கிஷான் மான் தன் யோஜனா :-
இந்த திட்டமானது மத்திய அரசால் விவசாயிகளுக்கான ஓய்வூதியத் திட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். மேலும் வயதிற்கு ஏற்றவாறு சேமிப்பானது ஒரு மாதத்திற்கு 55 ரூபாய் முதல் 200 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயத்திருக்கிறது. அதன்படி, இணைந்து தங்களுடைய சேமிப்பை முடிக்கக்கூடிய விவசாயிகளுக்கு 60 வயதிற்கு மேல் மாதத்திற்கு 3 ஆயிரம் ரூபாய் என வருடத்திற்கு 36,000 இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. விவசாயிகள் எவ்வளவு சேமிக்கிறார்களோ அதற்கு ஈடாக மத்திய அரசும் அவர்களுடைய வங்கி கணக்கில் பணத்தை செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வூதியம் பெறுவதற்கான வழிமுறைகள் :-
பிரதான் மந்திரி கிக்ஷான் திட்டத்தில் இணைந்திருந்தாலே விவசாயிகளுக்கு போதுமான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் இவர்கள் சேர்த்து வைக்கக் கூடிய வங்கி கணக்கில் இருந்து இதற்கான பணம் தானாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்றும் இதற்காக தனியாக அப்ளை செய்வதோ அல்லது சேமிப்பு தொடங்குவதோ என்பது தேவையில்லை என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் பெறப்படும் பொழுது முதல் மூன்று மாதங்களுக்கு 2000 ரூபாய் சேர்த்து ஒரு வருடத்திற்கு 42 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.