ASTHMA: ஆஸ்துமா நோய் கட்டுப்பட உதவும் எளிய ஹோம் ரெமிடிஸ் உங்களுக்காக!!

0
68
ASTHMA: Simple Home Remedies for Controlling Asthma!!
ASTHMA: Simple Home Remedies for Controlling Asthma!!

நீண்ட கால நுரையீரல் சம்மந்தபட்ட நோய்களில் ஒன்று ஆஸ்துமா.சுவாசக் குழாய் அலர்ஜி காரணமாகவும் இந்த ஆஸ்துமா பாதிப்பு உண்டாகிறது.உங்களுக்கு நீண்ட காலம் சளி தொந்தரவு இருந்தால் சுவாசப் பாதையில் அவை அடைத்துக் கொண்டு மூச்சுவிடுவதில் சிரமத்தை உண்டாக்கிவிடும்.

அது மட்டுமின்றி மார்பு இறுக்கம்,இருமல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.இந்த பாதிப்பை ஆரம்ப நிலையில் கட்டுப்படுத்த தவறினால் நிச்சயம் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.புகை,தூசி,நெடி போன்ற காரணங்களால் மூச்சு குழாயில் அலர்ஜி ஏற்பட்டு மூச்சு விடுவதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.எனவே ஆஸ்துமா பாதிப்பை ஆயுர்வேத முறைப்படி கட்டுக்குள் வைத்துக் கொள்ள முயலுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி – ஒரு துண்டு
2)பூண்டு – இரண்டு பல்
3)கிராம்பு – இரண்டு

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இரண்டு பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து இரண்டு கிராம்பை பவுடர் பதத்திற்கு பொடித்துக் கொள்ளுங்கள்.இவை மூன்றையும் ஒன்றாக மிக்ஸ் செய்து ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து பருகினால் ஆஸ்துமா பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)இஞ்சி – ஒரு துண்டு
2)பால் – ஒரு கிளாஸ்
3)மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் இஞ்சியை தோல் நீக்கிவிட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து பால் ஊற்றி சூடுபடுத்திய பிறகு இஞ்சி சாறு சேர்த்து கலந்துவிடுங்கள்.

பிறகு கால் தேக்கரண்டி மஞ்சள் தூளை அதில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் ஆஸ்துமா கட்டுப்படும்.

தேவையானபொருட்கள்:-

1)மிளகு – கால் தேக்கரண்டி
2)பட்டை – ஒரு துண்டு
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்”-

முதலில் ஒரு துண்டு பட்டை மற்றும் கால் தேக்கரண்டி மிளகை வாணலியில் போட்டு வறுக்க வேண்டும்.

பிறகு இதை பொடித்து ஒரு கிளாஸ் அளவு நீரில் கொட்டி கொதிக்க வைத்து தேன் கலந்து பருகினால் ஆஸ்துமா பாதிப்பு கட்டுப்படும்.அதேபோல் தேனில் ஊறவைத்த பூண்டு சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா நோய் கட்டுப்படும்.

Previous articleஇந்த மூலிகை பொடி “TB” நோயை குணமாக்கும்!! நம்புங்க.. இது 100% அனுபவ உண்மை!!
Next articleஉடலில் அடிபட்ட தழும்பு மறையலையா? இந்த பேஸ்ட் அப்ளை செய்யுங்க.. இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்!!