ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த சூரணத்தை எடுத்துக் கொண்டால் உடனடி பலன் கிடைக்கும்!!

Photo of author

By Gayathri

ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த சூரணத்தை எடுத்துக் கொண்டால் உடனடி பலன் கிடைக்கும்!!

Gayathri

Updated on:

asthma-sufferers-will-get-immediate-benefit-if-they-take-this-surana

சுவாசப்பாதை சம்மந்தப்பட்ட நோய்களில் ஒன்று ஆஸ்துமா.இதனால் இருமல்,மூச்சுத்திணறல்,சுவாசிப்பதில் கடினம் போன்ற தொல்லைகள் ஏற்படும்.ஆஸ்துமா பாதிப்பை குணமாக்க முடியாது என்றாலும் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

நுரையீரல் நோயாக கருதப்படும் ஆஸ்துமா பரம்பரைத் தன்மை,ஒவ்வாமை,மாசு போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

ஆஸ்துமாவை குணமாக்கும் வீட்டு வைத்தியம்:

தேவையான பொருட்கள்:

1)தாளிசாதி சூரணம் – 2 கிராம்

2)ஆடாதோடை இலை பொடி – 2 கிராம்

3)பவள பற்பம் – 100 மில்லி

4)தேன் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

கிண்ணம் ஒன்றில் தாளிசாதி சூரணம் 2 கிராம் அளவிற்கு சேர்த்துக் கொள்ளவும்.பிறகு ஆடாதோடை இலை பொடி 2 கிராம்,பவள பற்பம் – 100 மில்லி ஊற்றி கலந்து விடவும்.

பின்னர் கால் தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி நன்றாக மிக்ஸ் செய்து பருகி வந்தால் ஆஸ்துமா குணமாகும்.

தேவையான பொருட்கள்:

1)தூதுவளை இலை – 10

2)நெய் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து கால் தேக்கரண்டி நெய் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் 10 தூதுவளை இலையை போட்டு நன்கு வதக்கி எடுக்கவும்.

இவ்வாறு வதக்கியதை சூடான சாத்தில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:

1)பூண்டு – இரண்டு பல்

2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

இரண்டு பல் வெள்ளைப்பூண்டை தோல் நீக்கி இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் பூண்டு சாறு சேர்த்துக் கலந்து கொள்ளவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் ஆஸ்துமா பாதிப்பு குணமாகும்.

தேவையான பொருட்கள்:

1)கரு மிளகு – 1/4 தேக்கரண்டி

2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

கால் தேக்கரண்டி அளவு கரு மிளகு எடுத்து உரலில் போட்டு இடித்து தூளாக்கி கொள்ளவும்.பிறகு அதில் சிறிது தேன் கலந்து குழைத்து சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்.

தேவையான பொருட்கள்:

1)வெந்தயம் – ஒரு தேக்கரண்டி

2)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

பாத்திரம் ஒன்றில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து பருகினால் ஆஸ்துமா குணமாகும்.