இன்று இந்த ராசிக்காரர்கள் யோசித்து செயல்பட வேண்டிய நாள்!

0
113

மேஷம்

இன்று தங்களுக்கு வசந்த காலத்திற்கு வழி பிறக்கும் நாள், சுபகாரிய பேச்சுவார்த்தைகள் முடிவாகும். பேச்சுத்திறமை காரணமாக, சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றலாம்.

ரிஷபம்

இன்று தங்களுக்கு முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும், குடும்பத்தின் குதூகலம் கொடுக்கும் சம்பவம் ஒன்று நடைபெறும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் உடனடியாக கிடைக்கும்.

மிதுனம்

இன்று தாங்கள் உற்சாகத்துடன் செயல்படும் நாள், பண நெருக்கடிகள் நீங்கும். உடன்பிறப்புகள் கேட்ட உதவிகளை உடனடியாக செய்து கொடுப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கொண்டு மகிழ்ச்சியடைவீர்கள், வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

கடகம்

இன்று தங்களுக்கு தொலைபேசி வழி தகவலால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். இடம் மாற்றம் தொடர்பான இனிமையான தகவல் வந்து சேரும், பயணத்தின் போது பால்ய நண்பர் ஒருவரை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள். உற்றார், உறவினர் வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு தெய்வீக நம்பிக்கை அதிகரிக்கும் நாள், சேமிப்பை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும். பொருள் சேர்க்கைக்கு வழி பிறக்கும். வெளிநாட்டு தொடர்பால் அனுகூலம் உண்டாகும், வீடு, இடம், வாங்கும் முயற்சியை கை போடும்.

கன்னி

இன்று தங்களுக்கு உள்ளம் மகிழும் செய்தி வந்து சேரும் நாள், உற்றார், உறவினர்களின் உதவி கிடைக்கும், தொழிலில் அனுபவம் மிக்க பங்குதாரர்கள் வந்திணைவார்கள், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்ச்சியடைவீர்கள்.

துலாம்

இன்று தாங்கள் சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களுடன் இருந்த பிரச்சனை நீங்கும், தொழிலில் லாபம் அதிகரிக்கும், சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிகம்

இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள் மங்கள நிகழ்சிகள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றலாம். வீட்டிற்கு தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள் பயணத்தால் பலன் கிடைக்கும்.

தனுசு

இன்று தாங்கள் திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தாய் வழியில் உண்டான தகராறுகள் நீங்கும், வாரிசுகளின் கல்வி முன்னேற்றத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள், இடம், பூமி, தொடர்பான விதத்தில் லாபம் அதிகரிக்கும்.

மகரம்

இன்று தங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள், விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேர்வார்கள். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவிற்கு வரும். பரிமாற்றம் ஒழுங்காகும், உத்தியோக மாற்றம் உறுதியானவதற்கான வாய்ப்புண்டு.

கும்பம்

இன்று தங்களுக்கு கனவுகள் யாவும் நனவாகும் நாள், தொட்ட காரியம் தொலங்கும் வரவு திருப்திகரமாக இருக்கும், வாரிசுகளிடம் பக்குவமாக பேசுவது நல்லது. சொத்துக்களிலிருந்த வில்லங்கங்கள் நீங்கும் திருமண பேச்சுக்கள் முடிவாகலாம்.

மீனம்

இன்று தாங்கள் நினைத்தது நிறைவேற இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள், எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நன்று. தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறைந்து காணப்படும்.