இன்று பூமியின் வளிமண்டலத்திற்குள் வரும் விண்கள்!! 100 அணுகுண்டுகளுக்கு சமம் என்று கூறும் விஞ்ஞானிகள்!!

Photo of author

By Gayathri

பூமி ஆனது தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி மட்டுமின்றி பல கோள்கள், துணைக்கோள்கள், விண்கற்கள், தூசுகள் என ஏராளமானவை சூரியனை சுற்றி வருகிறது. இவை ஒவ்வொன்றும் சூரியனை சுற்றிவர அதன் நீள் வட்ட பாதைக்கு ஏற்றவாறு காலங்கள் மாறுபடுகின்றன.

சூரிய குடும்பம் பற்றிய ஆராய்ச்சிகள் விஞ்ஞானிகள் இடையே இன்றளவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் பூமியை போன்று வேறு ஏதும் கோள்கள் இருக்கின்றனவா ? என்றும், எத்தனை சூரிய குடும்பங்கள் உள்ளன என்றும் பால்வழி அண்டங்கள் குறித்தும் என இப்படி இவர்களின் ஆராய்ச்சிகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

அவ்வாறு, தற்பொழுது விஞ்ஞானிகள் கொடுத்துள்ள அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. சூரியனை சுற்றும் துணைக்கோள்கள் விண்கற்கள் ஆகியவை சில நேரங்களில் பூமியின் இடையே வந்து செல்வதுண்டு. அதிலும் விண்கற்கள் பூமியினுடைய வளிமண்டலத்திற்கு உள்ளே வந்து எரிந்து போவதும் சில நேரங்களில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக, இன்று நூறு அணுகுண்டுகளுக்கு சமமான விண்கல் ஒன்று பூமியின் வளிமண்டல ஓடுபாதையில் வர இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும், ‘ ஸ்பேஸ் ராக் 99942 Apophis’ என்ற விண்கல் 450*170 மீட்டர் அளவு கொண்டதாம்.இது பூமி மீது விழுந்தால் சுமார் 100 அணுகுண்டுகள் பூமியில் வெடித்து சேதத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். எனினும், இந்த விண்கல் பூமியில் இருந்து சுமார் 19 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து சென்று விடும் என நிம்மதி கொடுத்து இருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்த வெண்கலானது 2004 ஆம் ஆண்டு முதல் அதாவது கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் விஞ்ஞானிகளுக்கு பெரும் தலைவலியாகவே இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது, இந்த விண்கலானது விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இந்த விண்கல் பூமி மீது மோதுவதற்கு அடுத்த 100 ஆண்டுகளுக்கு வாய்ப்பு இல்லை என நாசாவின் ஆப்ஜெக்ட்ஸ் ஆய்வு மையம் கூறியுள்ளது.