சாதிய பாகுபாட்டை பேசும் அசுரனுக்கு மத்திய அரசு அளித்த அதிர்ச்சி..!

Photo of author

By CineDesk

தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளது.

ஆண்டுதோறும் திரைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு தேசிய விருதை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. அந்த வகையில், 2019ம் ஆண்டிற்கான தேசிய விருது கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.  தேசிய விருது பெறுவோருக்கான பெயரை இயக்குனர் ஷாஷி என்.கருன் அறிவித்தார்.

அதில், சிறந்த தமிழ்படத்திற்கான விருது தனுஷ் படிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்திற்கு கிடைத்துள்ளது. எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை தழுவி சாதிய ஒடுக்குமுறையை பேசும் அசுரன் திரைப்படம் எடுக்கப்பட்டது. தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம், பசுபதி உள்ளிடோர் அசுரனில் தங்களதுச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த அசுரனாக வலம் வந்த தனுஷோ தனது நடிப்பிலும் அசுர தனத்தை வெளிப்படுத்தி இருப்பார். தாழ்குடி மக்களின் நிலப்பிரச்சனையையும், சாதிப்பாகுப்பாடையும் நெகிழ்ச்சியூட்டும் காட்சிகளாக அமைத்து கொடுத்த வெற்றிமாறனின் முயற்சிக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்தது மட்டுமின்றி வசூலையும் வாரிக்குவித்தது.

பல்வேறு விருதுகளை வாரி குவித்த அசுரன் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ”நரப்பா” என பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இந்த நிலையில் 2019ம் ஆண்டிற்கான சிறந்த திரைப்படமாக தேர்வாகிய அசுரன் தமிழ் சினிமாவிற்கு பெருமை தேடித்தந்துள்ளது.

சிறந்த தமிழ் படம் மட்டுமின்றி, அசுரனாக வலம் வந்த தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதையும் தட்டி சென்றுள்ளார். அசுரனை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் 2 தேசிய விருதுகளை பெற்றுள்ளது.

இதேபோன்று சிறந்த நடிக்கைக்கான விருதினை கங்கனா ரணாவத் பெற, திரைத்துறைக்கான சிறந்த மாநில விருதை சிக்கிம் பெற்றது. சிறந்த குடும்ப படமாக ஒரு பாத்திர ஸ்வப்னம் போலே என்ற மலையாள திரைப்படம் தேர்வாகியுள்ளது.