வன்னியர் இடஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்வோம்! திமுக பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சு!

0
107
we-will-cancel-the-vannier-reservation-controversial-speech-of-dmk-ponmudi
we-will-cancel-the-vannier-reservation-controversial-speech-of-dmk-ponmudi

வன்னியர் இடஒதுக்கீட்டை நாங்கள் ரத்து செய்வோம்! திமுக பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சு!

தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தேர்தல் களமானது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.அதனைத்தொடர்ந்து அரசியல்வாதிகள் பலர் நூதன முறைகளை பின்பற்றி மக்களிடம் ஓட்டுக்களை கவர்ந்து வருகின்றனர். இந்நிலையில் கட்சிகள் அனைத்தும் அதன் எதிர் கட்சிகள் செய்த குற்றங்களை ஏழம் போட்டு கூறியும் வாக்குகளை கேட்டு வருகின்றனர்.எவ்வளவு தான் தேர்தல் ஆணையம் பல பறக்கும் படை குழுக்களை நியமித்தாலும் பல இடங்களில் பண பரிவர்த்தனைகள் நடந்து தான் வருகின்றது.

ஆனால் திமுக மட்டும் ஆட்சிக்கு வரும் முன்னே பல சர்ச்சைகளில் தானாக தலையை கொடுத்து மாட்டிக்கொள்கிறது.குறிப்பாக சொல்லவேண்டுமென்றால்,உணவு சாப்பிட்டுவிட்டு கடைகாரருக்கு பணம் கொடுக்காமல் அவரை அடித்து பணத்தை கொடுக்க முடியாது என்று கூறியது.அதனையடுத்து காரில் கையும் களவுமாக பறக்கும் படையினரிடம் சிக்கிய லஞ்ச பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவர்களது பெரிய தலைவர்களே அழைப்பு விடுத்து பறக்கும் படையினரை மிரட்டியுள்ளனர்.

தொடர் அட்டூழியமாக திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டப்போது அவரை வரவேற்கும் வகையில் பகல் நேரத்திலேயே வான வேடிக்கைகள் நடத்தப்பட்டது.அப்போது அங்கிருந்த பட்டாசுகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக வெடித்து மாடியே தீ பற்றி எரிந்தது.அதில் போலீசார் உட்பட 6 பேருக்கு தீ காயம் ஏற்பட்டது.அப்போது அனைத்து மக்களும் இவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே இவர்களது ரௌடிசம் ஆரம்பித்துவிட்டது எனக் கூறினர்.

திமுக வினர் பல சர்ச்சைக்குரிய வார்த்தைகள் பேசியும் மாட்டிக்கொள்கின்றார்கள்.அதில் தற்போது திமுக பொன்முடி கூறிய வார்த்தியை போஸ்டர் அடித்து ஒட்டி அதிமுகவினர் மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.அவர் அதில் கூறியிருப்பது,”எங்களுக்கு வன்னியர் ஓட்டுக்களே வேண்டாம்,நாங்கள் வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம்,நாங்கள் அவங்களை நம்பி கட்சி நடத்தவில்லை” என்றெல்லாம் அவர் கூறியது அந்த சாதி மக்களிடையே பெருமளவு கோவத்தை ஏற்படுத்தியுள்ளது.அதுமட்டுமின்றி திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இவர் கூறியதை தன்வயம் படுத்திக்கொண்ட அதிமுகவினர் போஸ்டர் அடித்து வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.