பேரூராட்சி அலுவலகத்தின் பின்பக்கம் மரத்தில் உரசியப்படி தாழ்வாக செல்லும்
உயரழுத்த மின் கம்பி!! நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் மின்துறை அதிகாரிகள்!!
கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தின் பின்பகுதியில் உயரழுத்த மின் கம்பி செல்கிறது. இந்த மின்கம்பியானது வேப்ப மரத்தில் உரசியப்படி மிகத் தாழ்வாக செல்வதால் மிகப் பரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இந்த மின் கம்பியில் இருந்து புவனகிரி பேரூராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி போர்வெல் மற்றும் புவனகிரி தாலுகா மருத்துவமனைக்கான மின் இணைப்பும் செல்கிறது.
இவ்வாறு இருந்து வரும் நிலையில் நீண்ட நாட்களாக உயரழுத்த மின்கம்பியானது வேப்பமரத்தில் மிக தாழ்வாக உரசியப்படி செல்வதால் ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருந்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் மிகப்பெரிய ஆபத்து ஏற்படுத்தும் என பொதுமக்கள், அரசு மருத்துவமனைக்கு வருவோர் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். தாழ்வாக செல்லும் உயரழுத்த மின்கம்பியை சரியான உயரத்தில் அமைத்திட வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்ததனர்.
இதுவரை அது நிறைவேற்றப்படாமல் இருந்து வருவதாகவும், இனியும் காலதாமதம் செய்யாமல் மின்வாரிய அதிகாரிகள் வேப்ப மரத்தில் தவழ்ந்து செல்லும் உயரழுத்த மின் கம்பியை சரியான உயரத்தில் அமைத்திட வேண்டும். இல்லையெனில் ஆபத்து ஏற்பட்டு பிறகு சரி செய்வதை விட இப்போதே சரி செய்வது நல்லது என இப்பகுதி பொதுமக்களும், அரசு மருத்துவமனைக்கு வருவோரும், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.