அடேங்கப்பா! சாதம் வடித்த பின் கிடைக்கும் கஞ்சியை குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

0
162
atengappa-are-there-so-many-benefits-of-drinking-the-porridge-obtained-after-straining-the-rice
atengappa-are-there-so-many-benefits-of-drinking-the-porridge-obtained-after-straining-the-rice

நம் பாரம்பரிய உணவு தானியமான அரிசியை வைத்து வெள்ளை சாதம்,பிரியாணி,கலவை சாதம் போன்ற பல வெரைட்டி உணவுகள் தயார் செய்து உண்ணப்படுகிறது.இதில் சாதத்தை வேகவைத்த பின் கிடைக்கும் கஞ்சியை பலரும் ஊற்றிவிடுவார்கள்.சிலர் அந்த கஞ்சியில் சிறிது உப்பு கலந்து குடிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறார்கள்.இப்படி சாதம் வடித்த கஞ்சியை குடித்தால் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

ஆனால் இன்றைய நவீன உலகில் சமையல் செய்யும் நேரத்தை குறைக்க பலவகை பாத்திரங்கள் பயன்படுகிறது.பாத்திரத்தில் சாதம் செய்த காலம் மாறி தற்பொழுது குக்கரில் சில நிமிடங்களில் சாதத்தை தாயார் செய்யும் பழக்கம் அதிகாரிவிட்டது.

குக்கரில் சமைப்பது நேரத்தை மிச்சப்படுத்தினாலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு உண்டாக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.குக்கரில் வேக வைத்த சாதத்தை சாப்பிட்டால் புற்றுநோய்,உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

சாதம் வடித்த பின் கிடைக்கும் கஞ்சியை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

1)சாதம் வடித்த கஞ்சியில் உள்ள கார்போஹைட்ரேட் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது.

2)செரிமானப் பிரச்சனை,குடல் சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் சாதம் வடித்த கஞ்சியை தினமும் பருகலாம்.

3)உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருப்பவர்கள் சாதம் வடித்த கஞ்சியில் சிறிது உப்பு கலந்து குடிக்கலாம்.

4)தினமும் சாதம் வடித்த கஞ்சியை குடித்து வந்தால் சருமம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் அகலும்.

5)இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பட சாதம் வடித்த கஞ்சியில் சிறிது வெந்தயத் தூள் கலந்து குடிக்கலாம்.

6)பசி கட்டுப்பட உடல் எடை குறைய தினமும் ஒரு கப் சாதம் வடித்த கஞ்சி குடிக்க வேண்டும்.

7)சாதம் வடித்த கஞ்சியில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்திருக்கிறது.இந்த கஞ்சியை தினமும் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.