எலும்புருக்கி நோய் எதனால் ஏற்படும்? அதனை தடுக்கும் சில வழிமுறைகள் இதோ உங்களுக்காக!..  

0
89

 

 

எலும்புருக்கி நோய் எதனால் ஏற்படும்? அதனை தடுக்கும் சில வழிமுறைகள் இதோ உங்களுக்காக!..

 

 

எலும்புருக்கி நோய் என்பது குழந்தைகளில் எலும்புகள் மென்மை அடைந்து அதனால் எலும்பு முறிவு அல்லது குறைபாடு ஏற்படுவதைக் குறிப்பதாகும். குழந்தைகளைத் தாக்கும் நோய்களில் அதிகம் காணப்படுவது எலும்புருக்கி நோயாகும். உயிர்ச்சத்து டி குறைபாடு மிக முக்கியமான காரணமாகும். ஆனால் உணவில் உள்ள கால்சியம் குறைபாடும் எலும்புருக்கி நோயை ஏற்படுத்தும்.உணவில் உள்ள கால்சியம் சரியான முறையில் உறிஞ்சப்படாமல் இரத்தத்தில் கால்சிய பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால் எலும்பு மற்றும் பல் குறைபாடுகள் மற்றும் நரம்புத் தசை அறிகுறிகள் தோன்றும்.

உதாரணமாக அதிகப்படியான உணர்ச்சிவசப்படுதலும்.முதுகெலும்பு வளைதல்இ கால் வளைதல்இ எலும்பு முறிவடைதல் இந்நோயால் ஏற்படும். மேலும் அவற்றை சரி செய்யும் முறையை காணலாம்.முதலில் சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் புற ஊதாக்கதிர் பி வெளிச்சம் நம் உடலில் படவேண்டும்.உணவில் போதுமான அளவு கால்சியம் மற்றும் பாஸ்ஃபரஸ் ஆகியவை எலும்புருக்கி நோயைத் தவிர்க்கும்.நடைப்பயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும். சுண்ணாம்புச் சக்தி சமநிலையில் இருந்தால் எலும்பரிப்பு நோயை தவிர்க்க முடியும்.

author avatar
Parthipan K