அடேங்கப்பா!! கத்திரிக்காயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!! இதோ பாருங்கள்!!

0
283
#image_title

அடேங்கப்பா!! கத்திரிக்காயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!! இதோ பாருங்கள்!!

பலருக்கு கத்தரிக்காய் விருப்பமான காயாக இருக்கும். இது தரும் சுவையையும் ஆரோக்கியத்தையும் யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக விட்டமின்கள், மினரல் சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்

முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது. போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

வேகவைத்த கத்திரிக்காய், கொஞ்சம் பூண்டு, தேவைக்கேற்ற உப்பு சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால் வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெறலாம். நெருப்பில் சுட்ட கத்திரிக்காயுடன் சர்க்கரை கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் குறையும்.

பித்த வாந்தி, பித்த கிறுகிறுப்பு உள்ளவர்கள் தினமும் கத்தரிக்காயை சமைத்துச் சாப்பிடலாம். அதேபோல் ஜலதோஷம் பிடித்து நெஞ்சில் கபம் கட்டியிருந்தால் அதை வெளியேற்ற தினமும் கத்தரிக்காயில் சாம்பார், புளிக்குழம்பு, கூட்டு என விதம்விதமாக செய்து சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும்.

 

Previous article2 முறை பயன்படுத்தினால் போதும்!! வேண்டாம் வேண்டான்னு சொன்னாலும் முடி வளர்வது நிக்காதா!!
Next articleமாரடைப்பு முதல் நரம்பு அடைப்பு வரை ஒரே இரவில் குணமாக இதை ஒரு முறை குடித்தால் போதும்!!