பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலம் செய்யப்பட்டு வந்தாலும் பலர் இன்றளவும் தங்களுடைய ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தியே பணத்தினை வித்ட்ரா செய்து பயன்படுத்தி வருகின்றனர். ஏடிஎம் கார்டு பயன்படுத்தக்கூடிய பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மே 1 ஆம் தேதி முதல் புதிய விதிகளின் அடிப்படையில் கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது.
சொந்த வங்கி இருக்கக்கூடிய இடங்களுக்கான ஏடிஎம் சேவை :-
✓ மெட்ரோ நகரத்தில் 1 மாதத்திற்கு 5 முறை இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.
✓ மெட்ரோ அல்லாத நகரங்களில் 1 மாதத்திற்கு 5 முறை இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.
✓ 21 ரூபாயாக வசூலிக்கப்படும் கூடுதல் பரிவர்த்தனை மே ஒன்றாம் தேதிக்கு பிறகு 4 ரூபாய் சேர்த்து 25 ரூபாயாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ மெட்ரோ அல்லாத நகரத்தில் 21 ரூபாய் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் 2 ரூபாய் சேர்த்து 23 ரூபாயாக வசூலிக்கப்படும் விட தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற வங்கி ஏடிஎம் சேவைகளை பயன்படுத்தும் பொழுது :-
✓ மெட்ரோ நகரங்களில் 1 மாதத்திற்கு 3 இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.
✓ மெட்ரோ அல்லாத நகரங்களில் 1 மாதத்திற்கு 5 இலவச பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.
✓ இதுவரை 21 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்த கூடுதல் கட்டணம் மே ஒன்றாம் தேதிக்கு பிறகு 4 ரூபாய் சேர்த்து 25 ரூபாயாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ மெட்ரோ அல்லாத நகரங்களில் 21 ரூபாயிலிருந்து 23 ரூபாய் ஆக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில ஏடிஎம் பரிவர்த்தனை கட்டுப்பாடுகள் :-
✓ நிதி அல்லாத ஏடிஎம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பொழுது இதுவரை எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. ஆனால் மே 1 ஆம் தேதிக்கு பின்பு 5 ரூபாய் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
✓ சர்வதேச ஏடிஎம் சேவையைப் பெறும் பொழுது 125 முதல் 150 ரூபாய் வரை பெறப்பட்டு வந்த கட்டணம் மே 1 முதல் 200 ரூபாய் வரை வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ பயணருடைய வங்கி கணக்கில் பணம் இல்லாத பொழுது ஏடிஎம் சேவை பயன்படுத்தினால் 20 ரூபாய் வசூலிக்கப்பட்டிருந்த நிலையில் இனி 25 ரூபாய் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.