சேலம் மாவட்டத்தில் கையும் களவுமாக  பிடிபட்ட ஏ.டி.எம் கொள்ளையன்?

Photo of author

By Parthipan K

சேலம் மாவட்டத்தில் கையும் களவுமாக  பிடிபட்ட ஏ.டி.எம் கொள்ளையன்?

Parthipan K

சேலம் மாவட்டத்தில் கையும் களவுமாக  பிடிபட்ட ஏ.டி.எம் கொள்ளையன்?

சேலம் மாவட்டம் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நிகழ்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோந்து பணியில் சில காவல்துறையினரை ஈடுபட்டார்கள்.இந்நிலையில்   வாழப்பாடி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் போலீசார் வெங்கடேஷ் ஆகியோர் பேரூர் பகுதியில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

அப்போது பேரூரில் உள்ள அயோத்தியபட்டணம் நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்திற்குள் ஒரு நபர் பல மணி நேரமாக நின்று கொண்டிருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பொறுமை காத்து போலிஸார்கள் கொள்ளையன் என்ன செய்கிறான் என்று பார்த்திருந்தனர்.

அப்போது அந்த கொள்ளையன் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தது தெரியவந்தது. இதனைக் கண்ட காவல்துறையினர் அந்த ஏடிஎம் கட்டடத்தை சுற்றி போலீசார் நின்றனர். பின்னர் கொள்ளையனை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர் அவரிடம் நடத்திய விசாரணையில் வாழப்பாடி அருகே குறிஞ்சி ஊராட்சி கோணஞ்செட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் இவனுடைய வயது 22 என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க வந்த திருடனை கையும் களவுமாக பிடித்த போலீசருக்கு அப்பகுதி மக்களும் உயர் அதிகாரிகளும் அந்த காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.