கேட்டதற்கு டபுளாக பணம் வழங்கிய ஏடிஎம்! நான் நீ என போட்டி போட்ட வாடிக்கையாளர்கள்!

0
218
ATM that gave double money for asking! I compete with you as customers!
ATM that gave double money for asking! I compete with you as customers!

கேட்டதற்கு டபுளாக பணம் வழங்கிய ஏடிஎம்! நான் நீ என போட்டி போட்ட வாடிக்கையாளர்கள்!

தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்து ஒரு செல்போன்க்குள் அடங்கி உள்ளது.மேலும் அனைத்து பண பரிவர்த்தனைகளையும் போன் மூலமாகவே செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.இருப்பினும் நம்முடைய தேவைக்காக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ள ஏடிஎம் என்பது முக்கிய தேவையாக அமைந்துள்ளது.அந்தவகையில் சென்னை அருகே உள்ள அம்பத்தூரில் பழைய சி.டி.எச் சாலையில் இந்தியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகின்றது.

அந்த வங்கியின் அருகிலேயே ஏடிஎம் மையமும் செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் இந்த ஏடிஎம் மையத்தில் நேற்று அதிகாலை பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் வந்துள்ளனர்.அப்போது வாடிக்கையாளர்கள் குறிப்பிட்டதை விட அளவுக்கு அதிகமான பணத்தை அந்த ஏடிஎம் இயந்திரம் வழங்கியுள்ளது.

ஆனால் வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணிற்கு அவர்கள் குறிப்பிட்ட பணம் மட்டுமே எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது.அதனால் உற்ச்சாகத்தில் வாடிக்கையாளர்கள் நான் நீ என போட்டி போட்டு அந்த ஏடிஎம் எந்திரத்தில் பணம் எடுத்துள்ளனர்.அதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் அந்த ஏடிஎம் எந்திரத்தில் அம்பத்தூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி என்பவர் ரூ 8 ஆயிரம் பணம் எடுத்த நிலையில் அவருக்கு கூடுதலாக 12 ஆயிரம் சேர்ந்து மொத்தம் 20,000 ரூபாய் வந்துள்ளது.

ஏடிம் வாசலில் அதிகளவு கூட்டம் சேர்ந்தது.மேலும் ஏடிஎம் மையத்தில் கூடுதலாக பணத்தை எடுத்த வாடிக்கையாளர்களில் ஆறு பேர் மட்டும் வங்கி திறக்கும் வரை வங்கியின் அருகில் காத்திருந்து பிறகு வங்கி திறந்ததும் இந்த சம்பவம் தொடர்பாக வாங்கி அதிகாரிகளிடம் எழுதி கொடுத்த கூடுதலாக வந்த பணத்தை திருப்பி கொடுத்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் ஏடிஎம் எந்திரத்தில் பணம் வைக்கும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.அந்த தகவலின் பேரில் விரைந்து வந்து ஏடிஎம் எந்திரத்தை சரிபார்தனர்.அப்போது தான் 200 ரூபாய் நோட்டுக்கள் வைக்கும் இடத்தில் 500 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் உடனடியாக ஏடிஎம் எந்திரம் சரி செய்யப்பட்டது.மேலும் இந்த ஏடிஎம் எந்திரத்தில் கூடுதலாக பணம் எடுத்தவர்கள் பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.அதனால் அந்த பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Previous articleபி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு விண்ணப்பம்! ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளது மாணவர்களே முந்துங்கள்!
Next articleஇரவில் நிர்வாணமாக வீதியில் உலா வரும் இளம்பெண்! மர்மம் நிறைந்த சிசிடிவி காட்சிகள் பீதியில் பொதுமக்கள்!