இலங்கை அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் தொடங்கிய மீனவர்களின் அட்டூழியங்கள்!!

Photo of author

By Gayathri

இன்று இலங்கை மீனவர்களால் 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது, மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற பொழுதும், இன்று தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது இந்திய அரசின் மீது அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இந்திய பிரதமர் இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இலங்கை அதிபர் இந்தியாவிற்கு நன்றி கடன் பட்டிருப்பதாகவும் இலங்கையினுடைய பொருளாதார நெருக்கடியில் இந்தியா உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார். அப்பொழுது இந்திய பிரதமர் மோடி அவர்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை குறித்த ஆலோசனைகளை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாக்கின.

இந்த ஆலோசனையின் போது இலங்கை அதிபர், இலங்கை படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பதற்கு தான் மிகவும் ஆர்வமாக தடுப்பதற்கு காத்துக் கொண்டிருப்பதாகவும், தமிழக மீனவர்கள் இரட்டை மடி வலையை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். ஏனெனில் இந்த இரட்டை மடி வலையானது பயன்படுத்தப்படுவதால் மீன்வளம் முற்றிலுமாக சுரண்டப்பட்டு விடும் என்று அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்பொழுது தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு கட்டும் விதமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்று 10 தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்களால் கைது செய்யப்பட்டு இருப்பது தமிழக மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.