மீண்டும் இணைந்த அட்டகத்தி கூட்டணி!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

0
154

பா ரஞ்சித் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் பா ரஞ்சித். இவரது இயக்கத்தில் கடந்த மாதம் ஜூலை 22 ஆம் தேதி சார்பாட்டா பரம்பரை என்ற திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன், ஜான் விஜய், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித் அடுத்ததாக அட்டகத்தி ஸ்டைலில் ஒரு காதல் திரைப்படத்தை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என டைட்டில் வைத்துள்ளார். இந்த படத்தில் 2 கதாநாயகர்கள் நடிக்க உள்ளனர். அதில் ஒருவர் அசோக் செல்வன் மற்றும் மற்றொருவர் காளிதாஸ் ஜெயராமும் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளனர்.

ஆனால் தற்போது அசோக் செல்வன் படத்தில் இருந்து வெளியேறியதால் அவருக்கு பதில் மற்றொரு நடிகரை தேடி வந்த நிலையில். இப்போது அட்டகத்தி தினேஷ் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் பா ரஞ்சித் தினேஷை வைத்து இயக்கிய முதல் படம் அட்டகத்தி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Previous articleஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி! இந்திய வீரர் ஏமாற்றம்!
Next articleஅடுத்த கொஞ்ச நாளைக்கு பாரதியும் கண்ணம்மாவும் ஒரு வீட்ல தான் இருக்கப் போறாங்க!! லாக் டவுன் இவங்களுக்கு நல்லா வொர்க் அவுட் ஆகுது!!