தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வானது மார்ச் 28ஆம் தேதி துவங்கிய ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வில் முரணாக ஒரு கேள்வி அமைந்திருந்ததாக ஆசிரியர்கள் மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து அதற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வானது மாநிலம் முழுவதும் 4113 மையங்களில் 12,480 பள்ளிகளில் பயின்ற 4,46,411 மாணவர்களும், 4,46,465 மாணவிகளும், 25,888 தனித் தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் சேர்த்து மொத்தமாக தமிழகத்தில் 9,13,036 பேர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளனர்.
பொதுத் தேர்வு முடிந்த பின் மாணவர்களின் உடைய விடைத்தாழிகள் 118 மண்டலங்களில் சேகரிக்கப்பட்ட நேற்று முதல் அதாவது ஏப்ரல் 21ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணியானது துவங்கியிருக்கிறது. இந்த விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இதில் 95,000 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றும் தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை இந்த விடைத்தாள் திருத்தும் பணியானது நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பத்தாம் வகுப்பு பொது தேர்வின் பொழுது சமூக அறிவியல் தேர்வில் 4 வது ஒரு மதிப்பெண் வினாவில் முரண்பாடான கேள்வி இடம் பெற்று இருப்பதாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அந்த நான்காவது கேள்வியான ” ஜோதிபா பூலே ஆதரவற்றவர்களுக்கான விடுதிகளையும் விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார். காரணம் ஜோதிபா புலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார் விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார் ” என்று குறிப்பிடப்பட்டு இருக்கக்கூடிய கேள்விக்கு மாணவர்கள் எந்த பதிலளித்திருந்தாலும் அதற்கு கருணை அடிப்படையில் ஒரு மதிப்பெண் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. மேலும் மே 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.