விமான பயணிகளின் கவனத்திற்கு! நாளை முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்!
நடப்பாண்டில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுகின்றது. போக்குவரத்து சேவைகள் அனைத்து இடங்களுக்கும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் சீனா, ஜப்பான், வடகொரியா, தாய்லாந்து, தென் கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் தாமாகவே கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழை ஏர் சுவிதா வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதனுடன் கொரோனா தொற்றால் பாதிக்கவில்லை என உறுதிமொழி படிவத்தை பயணிகள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அவற்றை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நாடுகளின் பயணிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கும் நடைமுறையில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளுக்கு அனுமதி சீட்டு வழங்கும் போது உரிய சான்றிதழைப் பயணிகள் பதிவேற்றியுள்ளார்களா என்பதையே விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.அனைத்து வர்த்தக விமான நிறுவனங்கள் விமான நிலைய நிர்வாகிகள், மாநிலங்களின் தலைமை செயலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.