அதிமுகவில் இரட்டை தலைமை! தமிழக தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதம்!

0
142
Tamil Nadu State Election Commission
Tamil Nadu State Election Commission

தமிழக தேர்தல் ஆணையம் இபிஎஸ்க்கு கொடுத்த ஷாக்! மீண்டும் குழப்பத்தில் அதிமுகவினர்

அதிமுகவில் இரட்டை தலைமையை ஆதரிப்பது போல தமிழக தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதம் அக்கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் பற்றிய கருத்து கேட்பதற்காக ஆலோசனை நடத்த ஜனவரி 16ம் தேதி தேர்தல் கமிஷன் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

தொழில் மற்றும் கல்வி காரணமாக இடம்பெயர்ந்து வெளி மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்க உதவும் வகையில் பொதுத்துறை நிறுவனம் ஒன்று மார்க் 3 எனப்படும் மின்னணு இயந்திரத்தை தேர்தல் கமிஷனுக்காக உருவாக்கியுள்ளது.

ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திரத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த ஆலோசனையை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது.

இதனை அடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தமிழக தலைமைதேர்தல் அதிகாரி சத்தியபிரதசாகு கடிதம் அனுப்ப முடிவு செய்து அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதில் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்து கேட்டு ஆலோசனை நடத்த ஜனவரி 16 ஆம் தேதி கூட்டம் ஒன்றுக்கு தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.

இதில் கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க அதிமுக தலைமை கழகத்திற்கு வந்த கடிதத்தில் அதிமுகவில் இரட்டை தலைமையை குறிப்பிடும் வகையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்ட அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை ஏற்றுக்கொண்டு அதனை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. அதேபோல் தேசிய சட்ட ஆணையம் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அதிமுகவின் கருத்துக்களை கேட்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பி இருந்தது.

இந்நிலையில் சத்யபிரத சாகு இரட்டை தலைமையை குறிக்கும் வகையில் அதிமுக தலைமை கழகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என கடிதம் அனுப்பி இருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.