ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு!! சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ரத்து!!

0
153

ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு!! சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ரத்து!!

வருடம் தோறும் மண்டல விளக்கு பூஜை காரணமாக ஐயப்பன் கோவில் திறக்கப்படுவதை ஒட்டி இலட்சக்கணக்கான பக்தர்கள் மாலையிட்டு ஐயப்பனை தரிசனம் செய்ய வருவர்.

அவ்வாறு இரண்டு வருட காலமாக மண்டல விளக்க பூஜையின் போது கொரோனாவை காரணம் காட்டி பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் தகற்றப்பட்டதால் பக்தர்கள் தரிசனம் செய்ய தேவஸ்தானம் அனுமதித்தது.

இத்தனை வருடங்கள் இல்லாத அளவிற்கு இந்த வருடம் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு ஐயப்பனை தரிசனம் செய்ய வந்து கொண்டே உள்ளதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக ஒரு நாளில் 90 ஆயிரம் முன்பதிவு மட்டுமே செய்ய முடியும் என்ற நிபந்தனை விதித்தது.

மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பெரியவர்கள் குழந்தைகளுக்கு என்று தரிசனம் செய்ய தனி வரிசை அமல்படுத்தியும் தற்பொழுது உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஆன்லைனில் முன்பதிவு ரத்து என்று பல தகவல்கள் வெளிவந்ததை அடுத்து தெரிவித்தாங்கூர் தேவஸ்தானம் அது குறித்து தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

அதாவது ஒரு நாளில் 90 ஆயிரம் முன்பதிவுகள் முடிவடைந்து விட்டால் 91 ஆயிரம் முன்பதிவை இணையதளம் ஏற்காது.

அதனை தான் முன்பதிவு ரத்து என்று பலரும் கூறி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே முன்பதிவு செய்பவர்கள் அன்றைக்கான எண்ணிக்கை முடிவடைந்து விட்டால் அடுத்த நாள் முயற்சிக்குமாறு கூறியுள்ளனர்.

Previous articleசபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! இவர்களுக்கு இன்று முதல் புதிய விதிமுறை!!
Next articleபென்சன் பெறுபவர்களின் கவனத்திற்கு! இனி ஓய்வூதியத்தை இவ்வாறே பெற்று கொள்ள முடியும்!