சபரிமலையில் கடந்த 18ஆம் தேதி பக்தர்களுக்காக சிறப்பு திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது எதற்காக எனில், சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் பொதுவாக புல்மேடு, எருமேலியிலிருந்து பெருவழிப்பாதை மூலமாகத்தான் சபரிமலையை அடைகின்றனர்.
இந்த வழியில் செல்லும்போது சுவாமியினுடைய பாடல்களை பாடி கொண்டு சென்றாலும் கரடு முரடான பாதை மற்றும் அங்கு நிலவக்கூடிய அதிகப்படியான பனிப்பொழிவு சாரல் மழை போன்றவற்றை கடந்து ஐயப்பனை தரிசிக்க வேண்டியுள்ளது. இதை மட்டும் இன்றி அங்கு நடமாடக்கூடிய யானைக் கூட்டங்களையும் சமாளித்து வரும் ஐயப்ப பக்தர்கள் அதன் பின் தரிசனத்திற்காக பல மணி நேரங்கள் காத்து கிடக்கும் சூழல் இருந்த காத்து கிடக்கும் சூழல் இருந்து வந்திருக்கிறது.
இதற்காக ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்வதில் தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துதான் அடிப்படையில் கடந்த பதினெட்டாம் தேதி முதல் சிறப்பு திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது.
அதில், முக்குழியில் நுழைவுச் சீட்டு சீல் போட்டு வழங்கப்படும். அதுபோல் வரும் வழியான புதுக்குறிச்சி தாவளை, செரியானவட்டம் ஆகிய இடங்களிலும் முத்திரை (சீல்) வைக்கப்படும்.
முத்திரை இடப்பட்ட நுழைவு சீட்டுகளை கொண்டு வரும் பக்தர்களை அரை மணி நேரத்திற்குள் ஐயனை தரிசனம் செய்த செல்லும் வகையில் போலீசார் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதித்து வருகின்றனர். இதன் மூலம் ஐயப்பனை காண காத்திருக்கும் நிலை மாறி உடனடியாக பார்த்து செல்வதால் இத்திட்டமானது பக்தர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருக்கிறது.
முதல் நாளில் புல்மேடு வழியாக 2516 பேரும் எருமேலி வழியாக 650 பேரும் வந்தனர். இவர்களுக்கு அரை மணி நேரத்தில் ஐயனை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சபரிமலையில் இந்த ஆண்டு ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால் ஐயனை தரிசிக்க கட்டாயமாக ஆன்லைன் புக்கிங் செய்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்திருக்கிறது.
அதிலும், ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களுக்கும் ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் புக்கிங் என மொத்தம் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே ஒரு நாளைக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐயப்ப பக்தர்கள் மகா சங்கராந்தி நாளன்று மகர ஜோதியை காண அதிக அளவில் வருவார்கள் என்ற காரணத்தால் இப்பொழுதெல்லாம் ஐயப்பன் உடைய தரிசன நேரம் 18 மணி நேரமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
டிக்கெட் முன்பதிவிற்கான விவரங்கள் :-
✓ https://sabarimala.kerala.gov.in/ என்ற ஐடியில் போன் எண்ணைக் கொடுத்து அவர்களுக்கு வரும் ஓடிபி எண்ணை வைத்துத் தனிக் கணக்கு தொடங்க வேண்டும்.
✓ அதன்பின் அதில் கேட்கப்படக்கூடிய பெயர், முகவரி, ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்களைப் பதிவிட வேண்டும்.
✓ பிறகு தரிசன நாள், செல்லும் பாதை, சபரிமலை கோயிலை அடைந்து தரிசனம் செய்வதற்கான நேரம் உள்ளிட்டவை தேர்வு செய்து உறுதி செய்தால் விர்சுவல் க்யூ டிக்கெட் முன் பதிவு ஆகிவிடும்.
✓ பிறகு இந்த டிக்கெட்டை தரிசன கவுன்ட்டரில் கொடுத்தால் அவர்கள் ஸ்கேன் செய்து சரி பார்த்துப் பிறகு தரிசனத்திற்கு செல்வது எளிதான காரியம்.