ஐயப்பன் பக்தர்கள் கவனத்திற்கு!! முன்கூட்டியே இதை செய்யவில்லை என்றால் சாமி தரிசனம் ரத்து!!
வருடம் தோறும் கேரளா ஐயப்பன் கோவிலில் மண்டல விளக்கு பூஜை காரணமாக நடை திறக்கப்பட்டு பக்தர்களும் மாலையிட்டு ஐயப்பனை தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
ஆனால் இரண்டு ஆண்டு காலமாக கொரோனா காலகட்டம் என்பதால் பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்கவில்லை. அந்த வகையில் இந்த வருடம் அனுமதிக்கப்பட்ட நிலையில் அளவில்லாத கூட்டம் வந்தபடியே உள்ளது.
ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும் என்பது விதிமுறை. அந்த வகையில் சிலர் கேரளா நிலக்கல் பகுதிக்கு வந்துவிட்டு உடனடி முன்பதிவு செய்வர்.
ஆனால் கட்டுக்கடங்காத கூட்டம் வருவதால் தேவஸ்தானம் 90 ஆயிரம் முன்பதிவு மட்டுமே செய்ய முடியும் என்று அறிவிப்பை வெளியிட்டது ஆனால் நேற்று அந்த கட்டுப்பாட்டை மீறி ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர்.
அது மட்டும் இன்றி கூட்ட நெரிசலை தவிர்க்க முதியவர்கள் சிறியவர்கள் என்று இரு வரிசையாக பிரித்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் கூறினர்.
இவ்வாறு இருந்த நிலையில் இனி முன்பதிவு ஐயப்பன் பக்தர்கள் முன்கூட்டியே செய்து விட வேண்டும் உடனடி முன்பதிவானது ரத்து என்று தேவஸ்தானம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
எனவே பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு வருவதற்கு முன்பாகவே முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.