சிவில் சர்வீசஸ் எக்ஸாம் எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! கட்டணமில்லா பயிற்சி நுழைவு தேர்வு நடைபெறும் தேதி வெளியீடு!
தமிழக அரசு தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தமிழகத்தை சேர்ந்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளுக்கும் தமிழக அரசு சார்பில் சென்னையில் உள்ள அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி மையத்திலும் கோவை ,மதுரை மாவட்டங்களில் உள்ள அண்ணா நூற்றாண்டு சிவில் பயிற்சி மையத்தில் மத்திய தேர்வாணையம் மூலம் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் பயிற்சிக்கு நுழைவுத்தேர்வுக்கு இணையதள வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. அதில் மொத்தம் 7.077 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அதனையடுத்து 2023 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி நடைபெற உள்ள மத்திய தேர்வாணையம் நடத்தும் முதல்நிலை தேர்வுக்கு கட்டணமில்லாமல் பயிற்சி அளிப்பதற்கான நுழைவுத் தேர்வு ,தமிழ்நாட்டில் உள்ள 17 மையங்களில் வருகிற 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.
நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை www.civilscrviccoaching.com என்ற பயிற்சி மைய இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளாலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த தேர்வில் 150 கொள்குறி வினாக்களுக்கு விடையளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள.தேர்வு காலை 10.30 மணி முதல் 1மணி வரை நடைபெறும். பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்வு மையங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன .