சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! இவர்களுக்கு இன்று முதல் புதிய விதிமுறை!!

0
190

சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! இவர்களுக்கு இன்று முதல் புதிய விதிமுறை!!

வருடம் தோறும் சபரிமலையில் மண்டல விளக்க பூஜைக்காக நடை திறப்பது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் கடந்த இரண்டு வருட காலமாக கொரோனா தொற்றால் மக்கள் தரிசனம் செய்ய அனுமதி தரவில்லை.

தற்பொழுது கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் அனைத்தும் நீங்க நிலையில் சபரிமலையில் மண்டல விளக்க பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐயப்பனை தரிசனம் செய்யும் வரும் பக்தர்களுக்கு ஏற்றவாறு பல கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட சூழலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் சாமியைக் காண கூட்ட நெரிசல் உண்டாகிறது.

இது குறித்த கேரளா உயர்நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், பெரியவர்கள் சிறியவர்கள் இளைஞர்கள் என அனைவருக்கும் தனித்தனி வரிசை அமைக்கும்படி தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இனி வரும் ஐயப்பன் பக்தர்கள் 50 வயதிற்கு மேற்பட்டு இருந்தாலும் சிறுவர் சிறுமையாக இருந்தாலும் அவர்களுக்கு தனி வரிசை மூலம் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதேபோல ஐயப்பனை தரிசித்து விட்டு அவரவர் ஊர் செல்லும் பக்தர்களுக்கு பம்பையில் இருந்து நிலக்கல் செல்வதற்கு தேவையான அளவு பேருந்து வசதி இல்லாததால் வெகு நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது.

அதனால்  சாமி தரிசனம் முடித்து அவரவர் ஊர் திரும்பும் பக்தர்களுக்கு அவர்களுக்கு தேவையான பேருந்து வசதியை ஏற்படுத்தித் தருமாறு அந்த மாவட்ட ஆட்சியருக்கு கேரளா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous articleவிவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! வங்கி கணக்கில் ரூ 6000.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!! 
Next articleஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு!! சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு ரத்து!!