பக்தர்களின் கவனத்திற்கு! அயோத்தியில் ராமர் கோவிலுக்கென சில கட்டுப்பாடுகள் அமல்!
கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.அயோத்தியில் நடக்கும் கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் முடிவடைந்துள்ளது.மேலும் கட்டுமான பணிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றம் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது.இந்நிலையில் வரும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கோவிலின் தரைத்தளம் தயாராகி விடும்.
அதனையடுத்து 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி மகர சங்கராந்தி நாளில் கோவில் கர்ப்பகிரகத்தில் ராமர் சிலைகள் நிறுவப்படும் என தெரிவித்துள்ளனர். அதனைதொடர்ந்து அதே மாதத்தில் ராமர் கோவில் பக்தர்களுக்கு திறந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
இந்நிலையில் ஆணையத்தின் துணைத்தலைவர் விஷால் சிங் கூறுகையில் அயோத்தி மெகா திட்டம் 2031 ன்படி கோவிலை சுற்றி 500 மீ சுற்றளவில் மத சடங்குகள் மேற்கொள்ளவே அனுமதிக்கப்படும்.மேலும் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் வர்த்தகம் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
ராம ஜென்மபூமி பாதுகாப்பு மற்றும் ராமர் கோவிலின் புனிதத்தை கருத்தில் கொண்டு தான் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இந்த பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் அதிகபட்ச உயரம் 7.5 மீட்டராக மட்டுமே இருக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் அந்த பகுதிகளில் இருக்கும் நீர்த்தேக்கங்கள் ,குளங்கள் ,வடிகால் மற்றும் பிற நீர் ஆதாரங்கள் அல்லது வடிகால் ஆதாரங்களின் பாதுகாப்பு போன்றவைகள் மெகா திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது.அந்த இடங்கள் ஆறு மீட்டர் சுற்றளவில் எந்த கட்டுமானமும் இருக்காது என தெரிவித்தார்.