சர்க்கரை நோயாளிகள் கவனத்திற்கு.. அரிசியை இப்படி சமைத்து சாப்பிட்டால் சுகர் லெவல் எகிறாது!!

Photo of author

By Gayathri

இந்தியாவில் பெரும்பாலானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நம் உணவுமுறை பழக்கங்கள் சர்க்கரை நோய் உருவாக முக்கிய காரணமாக இருக்கிறது.வயதானவர்கள்,பணக்காரர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் வரும் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்த காலம் மாறி தற்பொழுது பிறந்த குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வரும் என்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

ஒருமுறை சர்க்கரை நோய் பாதிப்பு வந்துவிட்டால் அதை குணப்படுத்த முடியாது.வாழ்நாள் முழுவதும் அதை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.சர்க்கரை நோய் பாதித்தவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டால் அவை எளிதில் ஆறாது.இதனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடலில் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை இருப்பவர்கள் உணவுமுறையில் கடும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் கூறுவார்கள்.இனிப்பு உணவுகள்,அரிசி உணவுகளை குறைவாக சாப்பிட வேண்டுமென்று அறிவுறுத்துவார்கள்.ஆனால் இப்பொழுது சொல்லப்பட உள்ள டிப்ஸை பின்பற்றினால் அரிசி உணவுகள் எவ்வளவு சாப்பிட்டாலும் இரத்த சர்க்கரை அளவு உயராது.

நீங்கள் வேக வைக்கவுள்ள அரிசியை ஒரு பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே ஊற வைக்க வேண்டும்.இப்படி செய்தால் அரிசியில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எளிதில் நீங்கிவிடும்.

அரிசியை இரண்டு முதல் மூன்று முறை நன்கு அலசிய பிறகே வேக வைக்க வேண்டும்.இப்படி வேக வைக்கப்பட்ட சாதத்தை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் இருக்கும்.குக்கர் அல்லது கஞ்சி வடிக்கும் குக்கரில் அரிசியை வேக வைக்காமல் இரும்பு,பித்தளை போன்ற பாத்திரங்களில் சாதம் வேக வைத்து சாப்பிடலாம்.

அரிசி வேக வைக்கும் நீரில் சிறிது நெய் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.நீங்கள் வெள்ளை அரிசியை விட பழுப்பு அரிசியை வேகவைத்து சாப்பிட்டு வந்தால் எப்பொழுதும் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.