வேளாண் துறை அதிகாரிகள் பல்லடம் வட்டாரத்தில் இருக்கக்கூடிய விவசாய நிலங்களின் ஆவணங்களை ஆராய்ச்சி செய்து தனி அடையாள அட்டை பெறாத விவசாயிகளுக்கு பிஎம் கிஷான் உதவி தொகை வழங்கப்படாது என தெரிவித்திருக்கின்றனர்.
இது குறித்து பல்லடம் வேளாண் துறை உதவி இயக்குனர் அமுதா தெரிவித்திருப்பதாவது :-
பல்லடம் வட்டாரத்தில் இருக்கக்கூடிய நிலங்களின் ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் விவசாயிகளுக்கென தனியாக வழங்கப்படக் கூடிய அடையாள எண்களை பெறாத விவசாயிகளுக்கு பி எம் கிஷான் தரப்பில் வழங்கப்படக் கூடிய உதவி தொகையான ஆண்டுக்கு 6 ஆயிரம் என்று மூன்று தவளைகளாக 2 ஆயிரம் ரூபாய் வருகிற ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட மாட்டாது என்றும் உடனடியாக தனி அடையாள எண்ணை பெறாதவர்கள் பெற்றுக் கொள்ளும் படியும் தெரிவித்திருக்கிறார்.
பொதுவாக பல்லடம் வட்டாரத்தில் தற்பொழுது 21 வருவாய் கிராமங்கள் இருப்பதாகவும் அவற்றில் 3,403 விவசாயிகள் இருப்பதாகவும் அதில் 1875 விவசாயிகள் தங்களுக்கு என தனி அடையாள எண்ணை பெற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள 1,528 விவசாயிகள் தனி அடையாள எண்ணை பெறவில்லை என்றும் இதுவரை பெறாமல் இருக்கக்கூடிய விவசாயிகள் தனி அடையாள எண்ணை பெற்றால் மட்டுமே மத்திய மற்றும் மாநில அரசினுடைய அனைத்து நலத்திட்டங்களையும் பெற முடியும் என்றும் பி எம் கிஷான் திட்டத்தின் மூலம் உதவி தொகையை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டு இருக்கின்றார்.