குரூப் 2 தேர்வர்களின் கவனத்திற்கு!!கட்டணம் செலுத்த நாளையே கடைசி நாள்!!

0
90

TNPSC குரூப் 2 முதன்மை தேர்வு எழுதக் கூடியவர்கள் அந்த தேர்விற்கான கட்டணத்தை செலுத்த நாளை (டிசம்பர் 18) கட்டாயமாக செலுத்தி இருக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அனுமதி சீட்டு தரப்படாது என்றும் TNPSC சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமானது அரசு துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை உரிய அறிவிப்பினை வெளியிட்டு டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி வருகிறது.

 

அந்த வகையில், தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளர் சென்னை மாநகர காவல் தனிப்பிரிவு உதவியாளர் உள்பட 507 இடங்களுக்கும், குரூப் 2 ஏவில் நேர்முக உதவியாளர், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர் என 48 துறைகளில் காலியாக உள்ள 1820 பணியிடங்கள் என மொத்தம் 2,540 பணியிடங்களுக்கு குரூப் 2 தேர்வுகள் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்றது.

 

இந்த தேர்விற்கான முடிவுகள் டிசம்பர் 13ஆம் தேதி வெளியானது. இதில், குரூப்-2, 2ஏ முதல் நிலை தேர்வு முடிவில் 29,809 தேர்வர்கள் தேர்ச்சி பெற்று இருப்பது தேர்வு முடிவு புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிய வந்து இருக்கிறது. இதில் குரூப்-2 பதவிகளுக்கு 7,987 பேரும், 2ஏ பதவிகளுக்கு 21 ஆயிரத்து 822 பேரும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வினை எதிர்கொள்வது அனைவரும் அறிந்ததே. இந்த முதன்மை தேர்விற்காக டிசம்பர் 18ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான தமிழ் தகுதித்தாள் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.குரூப் 2 முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

Previous articleபிச்சை போட்டால் FIR பதிவு!! மாவட்ட ஆட்சியரின் முடிவால் அதிர்ந்த இந்தியா!!
Next articleஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!!2 லட்சம் பரிசுத்தொகை.. பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்பு!!