ஜூலை மாதம் 12 ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்த இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி குரூப் 4 தேர்வுக்கு தயாராகி இருக்கக்கூடிய மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
2025 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலமாக இந்த ஆண்டு 3935 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கக்கூடிய நிலையில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதி உடையவர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இதற்கான கடைசி நாள் மே 25 என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் தேர்வு குறித்த விவரங்களை அறிந்து கொள்ள www.tnpsc.gov.in என்ற அரசனுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகலாம் என்றும் கூறியிருக்கிறார்.
மேலும் இந்த தேவதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் மே 6ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டு மையத்தில் இந்த இலவச பயிற்சி வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இலவச பயிற்சி வகுப்புகளுக்கு சிறப்பான பயிற்றுநர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்துவர் என்றும் இலவச வைபை வசதி ஸ்மார்ட் போர்ட் அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலகம் பயிற்சி கால அட்டவணை வார தேர்வுகள் முழு தேர்வுகள் போன்றவற்றுடன் இந்த பயிற்சி நடத்தப்படும் என்றும் இந்த இலவச பயிற்சியில் சேர நினைப்பவர்கள் https://tamilnaducareerservices.tn.gov.in என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுடைய பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை :-
இந்த பயிற்சியில் சேர நினைப்பவர்கள் தங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் இரண்டு எடுத்துக்கொண்டு மே 6ஆம் தேதி அன்று பயிற்சி மையத்திற்கு நேரல் செல்லலாம் என்றும் மேலும் இது குறித்த விவரங்களை அறிய 9499055937 , 0422 – 2642388 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.