இல்லத்தரசிகளின் கவனத்திற்கு! இந்த அல்வா குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியம் ட்ரை செய்து பாருங்கள்!
ஆப்பிள் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழமாக கூறப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு வகை வகையான டிஷ் செய்து கொடுக்கலாம் அந்த வகையில் இந்த ஆப்பிள் அல்வாவை குழந்தைகள் விரும்பி உண்ணும் வகையில் செய்யும் முறை.
தேவையான பொருட்கள் :முதலில் ஆப்பிள் 2 தோல் நீக்கி துருவி எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு கோதுமை மாவு கால் கிலோ, பால் கால் லிட்டர், நெய் 150 மில்லி லிட்டர், சர்க்கரை அரை கிலோ, முந்திரி 10 ,பாதாம் 10 ,ஏலக்காய் பொடி அரை டேபிள் ஸ்பூன், கேசரிப் பவுடர் அரை டீஸ்பூன் ஆகியவையை சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அல்வாவின் செய்முறை : ஒரு கனமான வாணலியில் பாதி அளவுள்ள பாலை ஊற்றி, பால் கொதித்ததும் அதில் துருவிய ஆப்பிளை போட்டு நன்கு வேகவிட வேண்டும்.
அதன் பிறகு மீதமுள்ள பாலில் கோதுமை மாவை கரைத்து, அதை நன்கு வெந்த ஆப்பிள் கலவையில் ஊற்றி கேசரிப் பவுடரையும் சேர்த்து கிளற வேண்டும்.
அதன் பிறகு அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து நன்கு கிளறி, சிறிது இறுகியதும் அதில் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கிளற வேண்டும்.
அல்வா பதத்திற்க்கு வந்ததும் பிறகு முந்திரி, ஏலகாய் பொடி, பாதாம் சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆறவைத்து நமக்கு பிடித்த வடிவில் வெட்டி அத்துடன் நறுக்கிய முந்திரி, பாதாம் கொண்டு அலங்கரித்து கொள்ள வேண்டும் இந்த அல்வாவை அனைவரும் விரும்பி உண்ணலாம்.