ஜியோ ஏர்டெல் பயனாளர்கள் கவனத்திற்கு.. தாறுமாறாக எகிறும் ரீசார்ச் கட்டணம்!! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்குப் பிறகு டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதே போல கடந்த 2021 ஆம் ஆண்டு அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் 20% ரீச்சார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட இதுக்குறித்து ஆக்சிஸ் கேப்பிட்டலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து அதில் குறிப்பிட்டிருந்தது.
அந்த வகையில் தேர்தல் முடிவுக்கு பிறகு ரீசார்ஜ் கட்டண உயர்வானது நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.4ஜி அடுத்து 5ஜி சேவையை மக்கள் உபயோகிக்கும் வகையில் ஏர்டெல் மட்டும் ஜியோ நிறுவனங்கள் அனைத்து இடங்களிலும் வழங்கி வருகிறது. மேற்கொண்டு அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களையும் வகுக்கிறது.இந்த 5ஜி சேவையை மையப்படுத்தி லாபம் ஈட்ட பல முதலீடுகள் இதில் செய்யப்பட்டுள்ளது.
அதனை மீட்டெடுக்கவே தற்பொழுது ரீசார்ஜ் கட்டணத்தை டெலிகாம் நிறுவனங்கள் உயர்த்தப் போவதாக தெரிவித்துள்ளனர்.அந்த வகையில் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் 10 லிருந்து 17 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.இந்த ரீசார்ஜ் கட்டணம் உயர்வு குறித்த தகவல் பயனாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் அதிகாரப்பூர்வமாக எந்தெந்த நிறுவனம் போஸ்ட்பெய்டு,ப்ரீபைடு கட்டணத்தை எந்த விலையில் உயர்த்தும் என்பது தெரியவரும்.