தாய்மார்களின் கவனத்திற்கு! குழந்தைகளுக்கு இந்த அளவில் மட்டுமே பால் கொடுக்க வேண்டும்!
தற்போது உள்ள காலகட்டத்தில் குழந்தைகளுக்கு கடைகளில் விற்கப்படும் பொருட்களை அதிகம் கொடுத்து வருகின்றனர். ஆனால் குழந்தை பிறந்ததிலிருந்து குறிப்பிட்ட வயது வரை பால் மட்டுமே கொடுக்க வேண்டும் அவ்வாறு ஒரு தினத்திற்கு சராசரியாக எந்த அளவிற்கு குழந்தைகள் பால் குடிக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலமாக.
குழந்தை பிறந்து முதல் ஆறு மாத காலத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன் பிறகு 6 முதல் 12 மாத குழந்தைகளுக்கு தாய்ப்பாலுடன் சேர்த்து பழங்கள், காய்கறிகள் வேக வைத்து கொடுக்க ஆரம்பிக்கலாம்.
குழந்தைகளுக்கு ஒரு வயது முடிந்த பிறகு தான் பசும்பால் கொடுப்பதற்கு ஆரம்பிக்க வேண்டும். போதிய அளவு தாய்ப்பால் இல்லாத தாய்மார்கள் மட்டுமே மருத்துவரை ஆலோசனைப்படி பசும்பால் கொடுக்கலாம்.
அதன் பிறகு நகரப்புறங்களில் வசிக்கும் மக்கள் அனைவரும் குழந்தைகளுக்கு பாக்கெட் பால் தான் பெரும்பாலும் தருகின்றனர். அவ்வாறு தரும் பொழுது ஆவின் ஆரஞ்சு நிற பாக்கெட் குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கின்றது. ஏனென்றால் அதில் புல் கிரீம் இருக்கும்.
5 வயது குழந்தைக்கு ஒரு நாளைக்கு 400 மில்லி அளவு வரை பால் கொடுக்கலாம் ஆனால் அதை தாண்டி குழந்தைகளுக்கு பால் கொடுத்தால் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் குழந்தைகளுக்கு உணவு கொடுத்து பழக வேண்டும். அவர்கள் உணவு உண்ணும் பட்சத்தில் இரவு ஒரு டம்ளர் வீதம் பால் கொடுத்தால் போதுமானது. குறிப்பாக கடைகளில் விற்கப்படும் குக்கரே ,லேஸ் பிஸ்கட்ஸ் போன்றவைகளை தவிர்ப்பது, அவசியம்.