இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய நீட் தேர்வு எழுத நினைக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பை தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில் முதுநிலை நீட் தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என்றும் இதற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் துவங்குகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை நீட் தேர்வானது மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகழ்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில் இருக்கக்கூடிய மருத்துவ பட்டம் ஏற்படிப்புகளுக்கான எம் டி எம் எஸ் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்களை பெறுவதற்கான தகுதி தேர்வாக பார்க்கப்படுகிறது. முதுநிலை நீட் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்கள் மேலே குறிப்பிட்ட கல்லூரிகளில் குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் இணைந்து படிக்க முடியும்.
தமிழகத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் திருச்சி மதுரை, கோவை திருப்பூர் என 17 மாவட்டங்கள் மட்டுமல்லாத நாடு முழுவதும் இருக்கக்கூடிய 179 நகரங்களில் முதுநிலை நீட் தேர்வானது வருகிற ஜூன் 15ஆம் தேதி நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் மே 7ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டதோடு https://natboard.edu.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று முதுநிலை நீட் தேர்வு எழுத நினைக்கக்கூடிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.