பயணிகளின் கவனத்திற்கு! இந்த தேதிகளில் இங்கு ரயில் சேவை முழுவதுமாக ரத்து!

0
256
Attention passengers! Train service is completely canceled here on these dates!
Attention passengers! Train service is completely canceled here on these dates!

பயணிகளின் கவனத்திற்கு! இந்த தேதிகளில் இங்கு ரயில் சேவை முழுவதுமாக ரத்து!

தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் இன்று முதல் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை சனிக்கிழமை தோறும் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படும் மெமு  விரைவு ரயில் பராமரிப்புப் பணி காரணமாக ரத்து செய்யப்படுகின்றது.

அந்த வகையில் காட்பாடியில் இருந்து தினமும் காலை 9.30 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில் வண்டி எண் 06417 என்ற ரயில் காலை 11.45 மணிக்கு ஜோலார்பேட்டை சென்றடையும்.

மறுமார்க்கமாக ஜோலார்பேட்டையில் இருந்து தினத்தோறும் பகல் 12.40 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06418 என்ற ரயில் பகல் 2.40 மணிக்கு காட்பாடி சென்றடையும். இந்த ரயில் பிப்ரவரி 11 ,18 மார்ச் 4,11 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அதனை தொடர்ந்து வேலூர் கன்டோன்மண்டிலிருந்து தினந்தோறும் காலை பத்து மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில் காலை 11.55 மணிக்கு அரக்கோணம் சென்றடையும். மறுமார்க்கமாக அரக்கோணத்தில் இருந்து தினந்தோறும் பகல் 2.05 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில் மாலை 4.35 மணிக்கு வேலூர் கன்டோன்மண்ட் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து இந்த ரயில் பிப்ரவரி 14,21 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றது.

Previous articleஇரண்டு நாட்களுக்கு மின் தடை! அரசு சமந்தப்பட்ட வேலைகள் அனைத்தும் ரத்து?
Next articleஅரசு வெளியிட்ட முக்கிய தகவல்! ரேஷன் கடைகளில் இனி இலவசமாக இந்த பொருளும் கிடைக்கும்!