2000 ஆம் ஆண்டிற்கு முன் பிறந்தவர்கள் கவனத்திற்கு.. இதனை உடனடியா பெற வேண்டும்!! மத்திய அரசு திடீர் உத்தரவு!!
தனி நபர் ஒருவருக்கு பிறப்பு சான்றிதழ் ஒரு அடையாள ஆவணமாக விளங்குகிறது.பள்ளிகளில் சேர்க்க,ரேசன் அட்டையில் பெயர் சேர்க்க,கல்லூரியில் சேர்க்க பிறப்பு சான்றிதழ் ஒரு முக்கிய ஆவணமாக உள்ளது.
இந்நிலையில் மத்திய அரசானது ஆதார்,ஓட்டர் ஐடி போன்ற ஆவணங்களை போல் பிறப்பு சான்றிதழும் ஒரு அடையாள ஆவணம் என்று அறிவித்திருக்கிறது.இந்தியாவில் பிறப்பு-இறப்பு பதிவு(திருத்தும்) 2023, சட்டம் கடந்த ஆண்டு அமலாக்கப்பட்டது.இந்த சட்டத்தின் மூலம் பிறப்பு சான்றிதழை ஒரு ஆவணமாக பயன்படுத்த முடியும்.
இந்நிலையில் குழந்தைகள் பெயரில் பிறப்பு சான்றிதழ் பதிவு செய்யாதவர்கள்,2000 ஆம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களில் பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்கள் இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பிறப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியிருக்கிறது.அதேபோல் 2000 ஆம் ஆண்டிற்கு பின்னர் பிறந்தவர்களில் பிறப்பு சான்றிதழ் இல்லாதவர்கள் டிசம்பர் 31க்குள் பெற்றிருக்க வேண்டும்.
பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?
உங்களுக்கு பிறப்பு சான்றிதழ் வாங்கப்படவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முறையிட்டு பெற்றுக் கொள்ளலாம்.அதேபோல் கிராம பஞ்சாயத்துகளில் பதிவு செய்த பிறப்பு சான்றிதழ்களை https://gccapp.chennaicorporation.gov.in/birth_death_tn/PubBirthCertReport.jsp என்ற இணையத்தின் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும்.
முதலில் https://gccapp.chennaicorporation.gov.in/birth_death_tn/PubBirthCertReport.jsp என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.பிறகு அதிலுள்ள பர்த் சர்டிபிகேட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.பிறகு குழந்தை பிறந்த மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட RCHID பதிவெண்ணை அதில் பதிவிடவும்.பிறகு அதில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட நம்பரை என்டர் செய்ய வேண்டும்.
பின்னர் குழந்தையின் பாலினம்,வயது,பிறந்த தேதி,ஊர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தால் பிறப்பு சான்றிதழ் ஷோ ஆகும்.இதை கிளிக் செய்து உடனே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.