மக்களே எச்சரிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் அமல்! மீறினால் கடும் நடவடிக்கை!
தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான். அந்த வகையில் பொங்கல் பரிசாக ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டு வருகின்றது.அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கபட்டிருபதினால் வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் பயில்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊருக்கு சென்று பொங்கலை கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.
அவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளின் முன்பதிவு முடிந்த நிலையில் இன்று முதல் அனைத்து இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கி விட்டது.அதனை தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளனர்.அதில் பொங்கல் பண்டிகையின் முதல் நாளாக போகி பண்டிகை கொண்டாடபடுகின்றது.அப்போது பழையன கழித்தலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் தேவையற்ற பழைய பொருட்களை எரிப்பது வழக்கம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே பண்டிகை என்று பழைய பொருட்களை அதிகாலை நேரத்தில் தீ வைத்து எரிக்கும் பழக்கம் அனைவரிடமும் வந்துவிட்டது.இவ்வாறு பழைய துணிகள்,டயர் ,பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை ஏற்பதன் மூலம் அதிகளவு காற்று மாசு ஏற்படுகின்றது.அதனால் தமிழக அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தேவையற்ற பொருட்களை எரிப்பதை தவிர்த்து அவற்றை தனியாக மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பணியானது கடந்த ஜனவரி 8 ஆம் தேதி முதலே தொடங்கி விட்டது.மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்களிலும் சென்னை புறநகர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.