கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு.. கத்திரிக்காய் சாப்பிட்டால் கருக்கலைப்பு ஏற்படலாம்!!
கத்திரிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல. அதை புறக்கணிக்க முடியாது. உண்மையில் கத்திரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளும் அதிகம். ஆமாம், சிலர் கத்திரிக்காயை சாப்பிட்ட பிறகு அரிப்பு, சொறி ,சிறுநீரக கற்கள் மற்றும் குறைந்த இரத்த சர்க்கரை ஏற்படும்.
இவை அனைத்தும் கத்திரிக்காயில் காணப்படும் கூறுகளால் உடலில் சில ஒவ்வாமைகளை தூண்டுகின்றன. கத்திரிக்காய் நைட்ரேட்டுகளின் ஒரு நல்ல ஆதாரமாகும். இது இயற்கையாகவே நம் வயிற்றில் நைட்ரைட்டுகளாக மாற்றப்படுகிறது. பின்னர் இந்த நைட் ரைட்டுகள் புரதத்தின் அமினோ அமிலங்களுடன் வினைபுரிந்து நைட்ரோ சமைன்களை உருவாக்குகின்றன இயற்கையாக மாற்றப்பட்ட இந்த நைட்ரோ சமைன் உணவு விஷத்தை ஏற்படுத்தும்.
கத்திரிக்காயில் அதிக பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து உள்ளது .இதன் காரணமாக அதிகப்படியான நுகர்வு உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை மோசமாக்கும் .உண்மையில் அதிக பொட்டாசியம் வயிற்றில் தொந்தரவு உண்டாக்கி வாந்தியை ஏற்படுத்தும்.
கத்திரிக்காயை அதிகம் சாப்பிடுவது மாதவிடாய் சுழற்சியை தூண்டும். கத்திரிக்காய் இயற்கையில் டையூரிட்டிக் ஆகும். இந்த காரணத்திற்காக கர்ப்பிணி பெண்கள் இதை உட்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.ஏனெனில் இது மாதவிடாயை தூண்டும் மற்றும் மாதவிடாய் சுழற்சியை துரிதப்படுத்தும்.
அதிக அளவு கத்திரிக்காய் சாப்பிடுவது வயிற்றில் அசிடிட்யை உருவாக்கும். அசிடிட்டி தொந்தரவு இருப்பவர்களுக்கு இது நல்ல உணவு கிடையாது. கத்திரிக்காய் சாப்பிட்டு ஒருவருக்கு அசிடிட்டி தொந்தரவு ஏற்பட்டால் அவர் உடனடியாக கத்திரிக்காய் சாப்பிடுவதை நிறுத்தி விட வேண்டும்.
கத்திரிக்காயின் பக்க விளைவுகள் என்பது சாப்பிடுவதற்கு ஏற்றது கிடையாது என்று பொருள் அல்ல. இது முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு தான்.அதனால் கத்தரிக்காயை அளவோடு சாப்பிட்டு அதன் பயன்களை அனுபவிக்க வேண்டும்.