பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு.. ரூ 59 லட்சம் நிதி! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
மாணவர் மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் திறமையை வெளிக் கொண்டும் வரும் வகையில் பல நலத்திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்துள்ளது. அந்தவையில் தமிழகத்தில் அரசு மாதரும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வரும் நோக்கில் தொழில் முனைவோர் பயிற்சியானது அளிக்கப்பட உள்ளது.
அவர்களின் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் புத்தாக்க மேம்பாடு திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.அந்த வகையில் சென்னை குரோம்பேட்டையில் நேற்று தொழில்நுட்ப வளாகத்தில் தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பாக புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா மு அன்பரசன் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்ததோடு அங்கு வந்து வெற்றியடைந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
மேலும் இந்த விழாவில் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கு 59 லட்சம் நிதியை வழங்கினார். பின்பு செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அதில், கல்வியை மீறி தொழில் முனைவோர்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் வகையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
ஆர்வம் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதில் கலந்துகொண்டு தங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருகின்றனர். இந்த தொழில் முனைவோர் பயிற்சியானது கிட்டத்தட்ட ஐந்து இடங்களில் அமைத்து மாணவர்களுக்கு கற்றுத்தர ஆணை பிறப்பித்துள்ளனர். இதன் மூலம் மாணவர் மாணவிகள் பயனடைந்து எதிர்காலத்தில் தொழில் முனைவோர்களாக புதிய கண்டுபிடிப்பாளர்களாக தோற்றமளிப்பர் என்று கூறினார்.