மூத்த குடிமக்களின் கவனத்திற்கு! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!
திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவு வருகை புரிவது வழக்கம் தான். அந்தவகையில் கடந்த புராட்டாசி மாதம் மற்றும் வைகுண்ட ஏகாதசி நாளில் பக்தர்கள் அதிகளவு வந்ததன் காரணமாக மீண்டும் டைம் ஸ்லாட் டோக்கன் முறை கொண்டுவரப்பட்டது.அந்த டோக்கனின் மூலமாக யார் எந்த நேரத்தில் எந்த நாளில் வரவேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வரும் பொழுது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க முடிந்தது.
மேலும் நேற்று ரூ 300 டிக்கெட் மீண்டும் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடபட்டது.அதனை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள்,நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரிசன டோக்கன்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இன்று காலை 9 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ள முடியும்.tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் சென்று பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த தரிசன டோக்கனை முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் தங்களுடைய ஆதார் அட்டையை அளித்து இலவசமாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.