மாணவர்கள் கவனத்திற்கு! பொதுத் தேர்வுக்கான சுற்றறிக்கை வெளியீடு!

Photo of author

By Rupa

மாணவர்கள் கவனத்திற்கு! பொதுத் தேர்வுக்கான சுற்றறிக்கை வெளியீடு!

தமிழகத்தில் மாணவர்கள் தற்போது தான் நேரடி வகுப்புகளுக்கு செல்கின்றனர். முதலில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை செப்டம்பர் மாதம் முதல் தேதியில் பள்ளிகள் திறக்கப்பட்டது. பள்ளி திறந்த நாள் முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று பாடம் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு அடுத்ததாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என்று பல கேள்விகள் எழுந்து வந்தது.

அவர்களுக்கு முதலில் சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது. அதனை அடுத்து நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பல சலுகைகளை தமிழக அரசு கூறியது. தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட பெற்றோர்கள் ஒன்றாம் வகுப்பு மாணவர்களுடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட தன் பிள்ளைகளுடன் அமரலாம் என்று கூறினர்.

அதனை அடுத்து சென்ற வருடம் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இன்றி ஆல்பாஸ் செய்தனர். அதற்கு அடுத்து தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இதுவரை பாடத்திட்டங்கள் முடிக்காமல் நிலையே இருந்து வருகிறது. அதற்குள்ளேயே பருவமழை ஏற்பட்டு பல நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை நாளாகவே காணப்பட்டது. மூன்று மாதங்களில் 10 மற்றும் 11 12ஆம் உயர்கல்வி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வர உள்ளது. இந்நிலையில் மாணவர்கள் எப்படி தேர்வுக்கு தயாராக முடியும் என்று பல தரப்பினர் கேள்விகள் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு தேதி பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு டிசம்பர் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த தேர்வானது கடந்த மாதம் நவம்பர் 8 முதல் 12 ஆம் தேதி நடைபெறும் என கூறியிருந்தனர். ஆனால் தொடர் கனமழை காரணமாக தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட முடியவில்லை. அதனால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வகையில் இன்று தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதியை இன்று வெளியிட்டுள்ளனர். இந்த தேர்வானது டிசம்பர் 20 முதல் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறியுள்ளனர். அதுமட்டுமின்றி தேர்வு எழுதுபவர்கள் டிசம்பர் 14 முதல் தங்களது தேர்வுக்கான நுழைவுச் சீட்டை http://www.dge.tn.gov.in/ இன்று இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.