மாணவர்களின் கவனத்திற்கு! தேர்வுத்துறை வெளியிட்ட தகவல்!
கொரோனா பரவலுக்கு பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் தான் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வு பத்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது.
மேலும் நடப்பு கல்வி ஆண்டில் இந்த பொது தேர்வினை சுமார் 26 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். பொதுத்தேர்வினை நடத்த முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றது. பொதுத்தேர்வு எழுத தேர்வு மையங்கள் அமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளது. கடந்த பொது தேர்வின் பொழுது புகார்களுக்கு உள்ளான பள்ளிகளுக்கு தற்போது தேர்வு மையத்திற்கான அனுமதி அளிக்கப்படவில்லை.
மேலும் அங்கீகாரம் பெறாத மற்றும் முறையான வசதிகள் இல்லாத பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைப்பதற்கு அனுமதி இல்லை. இருப்பினும் அங்கீகாரம் நீட்டிப்பு அனுமதி பெறாத பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எழுத சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பள்ளி மாணவர்களுக்கு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் பிளஸ் டூ மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடைபெற உள்ளது. செய்முறை தேர்வு முடிவடைந்த உடனே பொது தேர்வு தொடங்கும் அதனால் மாணவர்களுக்கு முறையாக அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்கவும் மாணவர்களுக்கு கற்றல் திறனை அதிகரிக்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.